சீறிப்பாய்ந்த அக்னி ப்ரைம்.. அணுகுண்டுகளை சுமந்து செல்லும் ஏவுகணை.. கெத்து காட்டிய டிஆர்டிஓ...!
புவனேஷ்வர்: அக்னி ஏவுகணை வரிசையில் அணு ஆயுதங்களை கையாளும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய வரவான அக்னி பிரைம் வகை ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக டிஆர்டிஓ கூறியுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் உள்நாட்டிலேயே ஏராளமான அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வகையில் ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது.

ஏற்கனவே அக்னி வரிசையில் ஒன்று முதல் ஐந்து வரையிலான ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இதில் 1 முதல் 3 வரையிலான ஏவுகணைகள் இந்திய ராணுவத்திலும் தற்போது பயன்பாட்டில் உள்ளது ஏற்கனவே 5 ஆயிரம் கிலோ மீட்டர் வரை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் உருவாக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையில் 8,000 முதல் 10,000 கிலோ மீட்டர் பயணம் செய்து இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி 6 ஏவுகணையை இந்தியா உருவாக்கி வருகிறது. இதேபோல் தரையில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் உள்ள இலக்கை ஆயிரம் கிலோ மீட்டர் முதல் 2,000 கிலோ மீட்டர் வரை இருந்தாலும் துல்லியமாக தாக்கும் வலிமை கொண்ட அக்னி பிரைம் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது டிஆர்டிஓ அமைப்பு கூறியுள்ளது.
ஒடிசாவின் பாலசோர் கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட அக்னி ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக டிஆர்டிஓ எனப்படும் இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.
Recommended Video
ஏற்கனவே ஐந்து அக்னி வகை ஏவுகணைகள் சோதனை செய்து இருந்தாலும் அக்னி ஏவுகணைகள் வரிசையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அணு குண்டுகளை சுமந்து சென்று இலக்கை தாக்கும் இந்த அக்னி பிரைம் ஏவுகணை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தங்கள் அமைப்பால் உருவாக்கப்பட்டது என டிஆர்டிஓ அமைப்பு கூறியுள்ளது. மேலும் தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications