மோடி அறிவித்ததை போல அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி செய்யப்பட்டுவிட்டதா? ஒரு ரியாலிட்டி செக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி அறிவித்ததை போல, இந்தியாவிலுள்ள அனைத்து கிராமங்களில் முழுமையாக மின்வசதி செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்கிறது இந்த கட்டுரை.

ஒன் இந்தியாவுக்காக ரன்னிதி கல்சல்டிங் மற்றும் ரிசர்ச் நிறுவன மேலாண்மை பார்ட்னர் நிதின் மேத்தா மற்றும் சுயவிருப்ப ஆய்வாளரான பிரனாவ்குப்தா எழுதிய கட்டுரை இதோ:

2015 ஆம் ஆண்டில் நாட்டின் இரண்டாவது சுதந்திர தின உரையில், அடுத்த 1000 நாட்களுக்குள் 18,452 மின்சார வசதியற்ற கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கபடும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார் .

நாடு முழுவதும் 24 x 7 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும் என்றும், மின்சார நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. இந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டியது மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் மின்சாரம் வழங்குவதற்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது அவசியமாகும்.

தீன்தயால் திட்டம்

தீன்தயால் திட்டம்

செங்கோட்டையில் தைரியமான வாக்குறுதிகளைச் செய்வதற்கு சில வாரங்களுக்கு முன்னர், பிரதம மந்திரி தீன்தயால் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனாவை (DDUGJY) முறைப்படி தொடங்கினார். இது கிராமப்புற மின் வினியோகத்திற்கான அரசின் பிரதான திட்டமாகும். கிராமிய மின்மயமாக்குதலுக்கான ஒரு குறிக்கோளுடன் தொடங்கப்பட்டது இந்த திட்டம். 2006 ஆம் ஆண்டில் குஜராத்தில் செயல்படுத்தப்பட்ட ஜோதி கிராம் யோஜனா என்ற திட்டத்தின் மூலம், குஜராத் கிராமப்புற மின்சாரம் வழங்கலில் முன்னணி மாநிலமானது.

ஸ்மார்ட் போன் போதும்

ஸ்மார்ட் போன் போதும்

மின்சாரமயமாக்கல் குறித்த தகவலை இணையதள வசதி கொண்ட ஸ்மார்ட்போன் வைத்துள்ள நாட்டின் எந்த ஒரு குடிமகனும் இப்போது அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமம், அந்த கிராமத்திற்கு மின்சார வசதி, உள்ளூர் லைன்மேன் குறித்த விவரம், நடப்பட்ட மின்கம்பங்களின் புகைப்படங்கள் என அனைத்து தகவல்களும் வெப்சைட்டில் இடம் பெற்றுள்ளன. பல பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள் இது உண்மைதானா என கள ஆய்வுகளில் ஈடுபட்டனர். அதிருஷ்டவசமாக அவை உண்மையாகவே இருந்தன.

நல்ல வளர்ச்சி

நல்ல வளர்ச்சி

பிரதமர் வழங்கிய 1000 நாட்கள் காலக்கெடுவிற்குள் 18452 கிராமங்களுக்கு மின்சார வசதி செய்து தர 2018 மே மாதம் வரை கால அவகாசம் உள்ளது. இதுவரை, 13598 கிராமங்களில் மின்வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது 74 சதவீத வெற்றியாகும். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு செயல்படுத்திய மின் வினியோக திட்ட ஆண்டு சராசரியைவிட இது வேகம் குறைந்ததாக உள்ளது. ஆனால், இந்த 18452 கிராமங்களிலும் இத்தனை ஆண்டுகளாக மின் வசதி இல்லாததற்கு அங்குள்ள சிக்கல்களே காரணம். அதை இப்போதைய பாஜக அரசு திறம்பட சமாளித்து மின்வசதி செய்து தருகிறது. எனவே தாமதத்தை பெரிதுபடுத்த தேவையில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். உதாரணத்திற்கு, இதில் 5930 கிராமங்கள் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிக்க பகுதிகள். இப்போது அவற்றில் மின்வசதி செய்யப்பட்டுவிட்டது.

செய்ய வேண்டியது

செய்ய வேண்டியது

கிராமங்களுக்கு மின் வினியோகத்தை கொண்டு சேர்ப்பதோடு, அரசு வேலை முடிந்துவிடுவதில்லை. அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் சென்று சேர வேண்டும்.

24 x 7 மின்சக்தி கனவை நிறைவேற்றுவதற்கு, மின் உற்பத்தி அமைச்சகம், தலைமுறை திறன் மேலும் படிப்படியாக அதிகரிக்கிறது.

விநியோக உள்கட்டமைப்பு விரிவடைவதால், தேவை அதிகரிக்கும் எனவே மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Read in English: Electrifying Rural India?
English summary
To fulfil the dream of 24 x 7 electricity, the Power Ministry needs to ensure that the generation capacity also increases gradually. As the supply infrastructure expands, demand will naturally increase and we need to ensure that our generation capacity increases accordingly.
Please Wait while comments are loading...