• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 மேட்டர்.. அபுரோட்டில் இரு கைகளையும் கூப்பி.. மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி.. என்ன நடந்தது

Google Oneindia Tamil News

காந்தி நகர்: அபுரோடு கூட்டத்தில் திரண்டிருந்த மக்களிடம் இரு கைகளையும் கூப்பி மன்னிப்பு கேட்டார் பிரதமர் மோடி.. இரவு 10 மணிக்கு மேல் மைக்கையும், ஒலிபெருக்கிகளையும் பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறைகளை மதித்து, பிரதமர் மோடி தன்னுடைய பேச்சை ரத்து செய்ததுடன், அதற்காக பொதுமக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளது.. இதற்காக தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. 3 வருடங்களாக தலைவர் இல்லாமல் காங்கிரஸ் கட்சி திணறி வரும் நிலையில், இனிமேல்தான் தலைவர் பதவியையே நடத்த போகிறது..

ஆனால், பாஜகவோ கடந்த 6 மாதங்களுக்கு முன்பேயே களத்தில் குதித்துவிட்டது.. பக்காவான ஸ்கெட்ச்களையும் போட்டு வருகிறது.. இதற்கு காரணம், வலிமை பொருந்திய சில வடமாநிலங்களிலேயே, பாஜகவுக்கு செல்வாக்கு குறைந்து வருவதுதான்.

அதனால், சரிந்துபோன டேமேஜை தூக்கி நிறுத்தும் வகையில், பலவித அதிரடிகளையும், வியூகங்களையும், மக்களை ஈர்க்கும் விதத்திலான செயல்பாடுகளையும் கையில் எடுத்து வருகிறது.

5ஜி சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. முதலில் அதிவேக இணையம் எங்கு வருகிறது தெரியுமா? 5ஜி சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. முதலில் அதிவேக இணையம் எங்கு வருகிறது தெரியுமா?

கொடியசைத்தார்

கொடியசைத்தார்

அந்தவகையில், பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தன்னுடைய சொந்த மாநிலமாக குஜராத்துக்கு சென்றிருக்கிறார்.. ஆமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டு போட்டியையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்... பிறகு, பாவ்நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பிரதமர் தொடங்கி வைத்தார்.. 2-வது நாளான நேற்று காந்திநகர் மற்றும் மும்பை சென்டிரல் இடையேயான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலையும் பிரதமர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

பின்னர், காந்திநகரில் இருந்து அகமதாபாத்துக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தும் மகிழ்ந்தார்... இதையடுத்து, வேறு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க காந்தி நகரில் இருந்து, ஆமதாபத்துக்கு பிரதமர் மோடி தன்னுடைய பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, காந்தி நகர்-அகமதாபாத் சாலையில் திடீரென ஆம்புலன்ஸ் ஒன்று அவசர அவசரமாக வந்து கொண்டிருந்தது.. இந்த ஆம்புலன்ஸை பார்த்ததுமே, உடனடியாக தன்னுடைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாகனத்தை ஓரமாக நிறுத்தி, ஆம்புலன்ஸ் செல்ல உத்தரவிட்டார்.

 வி.ஐ.பி பந்தா

வி.ஐ.பி பந்தா

கொஞ்ச நேத்தில், அந்த ஆம்புலன்ஸும் கடந்து சென்றுவிட்டது.. அதற்கு பிறகு பிரதமர் மோடியின் வாகனங்கள் ஒவ்வொன்றாக செல்ல ஆரம்பித்தன.. இது வீடியோவாகவும் சோஷியல் மீடியாவில் வைரலானது.. ஆம்புலன்ஸுக்கு மோடி வழிவிட்டதை, பாஜகவினர் தூக்கி வைத்து கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.. சாலைவிதிகளை கடைபிடிப்பதில் மோடி முன்மாதிரியாக திகழ்கிறார், விஐபி என்ற பந்தாவே அவரிடம் இல்லை என்றெல்லாம் பாஜகவினர் புகழ்ந்து வருகிறார்கள்.

ஸ்பீக்கர்கள்

ஸ்பீக்கர்கள்

இந்நிலையில், இன்னொரு சம்பவமும் ராஜஸ்தானில் நடந்துள்ளது.. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானிலும் அடுத்த வருடம் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி இங்கு வந்திருந்தார்.. பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி கோவிலில் வழிபாடு செய்த பிறகு, பிரதமர் மோடி அபு சாலையை அடைந்தார்... அந்த நகரில் பிரம்மாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. சிரோஹி, துங்கர்பூர், பன்ஸ்வாரா, சித்தோர்கர், பிரதாப்கர், பன்ஸ்வாரா, பாலி, உதய்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்து, 40 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய அருகிலுள்ள பகுதிகளிலிருந்தும், ஏராளமான கட்சித் தொண்டர்கள் இந்த பேரணிக்கு அணிதிரட்டப்பட்டிருந்தனர்.

 மைக் + ஸ்பீக்கர்

மைக் + ஸ்பீக்கர்

ஆனால், பிரதமர் மோடி இங்கு தாமதமாக வந்து சேர்ந்தார்.. அதனால், சிரோஹியின் அபு ரோடு பகுதியில் நடந்த பேரணியில் அவர் உரையாற்றவில்லை.. 10 மணிக்கு மேல் ஸ்பீக்கர்களை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை உள்ளதால், மோடியால் அந்த பேரணியில் உரையாற்ற முடியாமல் போய்விட்டது.. இந்த காரணத்தை மோடியே அப்போது பொதுமக்களிடம் விளக்கினார்.. "நான் வந்து சேர்வதற்கு தாமதமாகிவிட்டது.. இரவு 10 மணி ஆகிவிட்டது.. விதிகள் மற்றும் விதிமுறைகளை நான் பின்பற்ற வேண்டும் என்று என்னுடைய மனசாட்சி சொல்கிறது.. அதனால், உங்கள் முன்பு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. ஆனால் நான் மறுபடியும் இங்கு வருவேன்.. இதோ நீங்கள் எனக்கு தந்த இந்த அன்பையும், பாசத்தையும், மறுபடியம் வந்து வட்டியுடன் திருப்பித் தருவேன்" என்று மைக், ஸ்பீக்கர் இது எதுவுமே இல்லாமல் பேசினார் மோடி..

 கைகூப்பி மன்னிப்பு

கைகூப்பி மன்னிப்பு

பேசி முடித்ததுமே "பாரத் மாதா கி ஜெய்" என்றும் கோஷத்தை முழக்கமிட்டார். தன்னுடைய பேச்சைக் கேட்பதற்காக பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்த நிலையில், அவர்களிடம் தன்னுடைய இரு கைகளையும் கூப்பி பிரதமர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.. இந்த வீடியோவையும் பாஜகவினர் வைரலாக்கி கொண்டிருக்கின்றனர்.. அத்துடன், மோடியின் இந்த செயல்பாட்டையும் பாஜக தலைவர்கள் ட்வீட் போட்டு வரவேற்று வருகின்றனர்..

 அமித்மாளவியா

அமித்மாளவியா

பாஜகவின் அமித் மாளவியா இந்த வீடியோவை பகிர்ந்து, "அபுரோட்டில் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வேண்டாம் என்று பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்... காரணம், அது நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்துவிட்டது... இது அன்றைய 7வது நிகழ்ச்சியாகும்... ஆனால், முன்னதாக வந்தே பாரத் மற்றும் அகமதாபாத் மெட்ரோவில் கொடியேற்றி வைத்ததுடன், அம்பாஜியிலும் பிரார்த்தனை செய்தார்" என்று பதிவிட்டிருந்தார்.

 2 வீடியோ 2 நிகழ்வு

2 வீடியோ 2 நிகழ்வு

அதேபோல், "பாஜக தேசிய துணைத் தலைவர் டி.கே.அருணா சொல்லும்போது, "பிரதமர் மோடி எப்போதும் முன்மாதிரியாக செயல்படுகிறார்.. யதார்த்தமான மற்றும் அடக்கமான செயல்பாடு.. மாண்புமிகு பிரதமர் மோடி ஜி, ராஜஸ்தானின் அபு ரோட்டில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.. இரவு 10 மணிக்கு பிறகு ஸ்பீக்கர்களை பயன்படுத்தக்கூடாது என்ற விதியை கடைப்பிடித்து, மைக்கையும் பயன்படுத்தவில்லை" என்று பதிவிட்டு அந்த வீடியோவையும் செய்துள்ளார். ஆக, பிரதமர் மோடியின் 2 நாள் பயணத்தில், 2 விதமான நிகழ்வுகளின், 2 வீடியோக்களை பாஜகவினர் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.

English summary
Greatness of PM: PM Modi skips microphone to obey loudspeaker norms and apologises to Rajasthan rally
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X