For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்புகின்றது – கேதார்நாத் யாத்திரையும் நேற்றுடன் முடிவு!

Google Oneindia Tamil News

டேராடூன்: கடும் வெள்ளத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தத்தளித்து வரும் பின்னணியில், இமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத், மானசரோவர் யாத்திரையானது நேற்றுடன் முடிவடைந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் தற்போது மழை நின்றுள்ளதால் மாநிலத்தை மூழ்கடித்துள்ள வெள்ளமும் குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பி வருகின்றது.

இமயமலைத் தொடரில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாய மலைக்கு, ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம்.

உயரமான மானசரோவர் ஏரி:

உயரமான மானசரோவர் ஏரி:

மிகவும் பிரசித்தி பெற்ற மானசரோவர் ஏரி இங்கு தான் உள்ளது. உலகிலேயே மிக உயரமான இடத்தில் உள்ள ஏரி என்ற பெருமையும் இதற்கு உண்டு.

யாத்திரை முடிவு:

யாத்திரை முடிவு:

இந்தாண்டுக்கான யாத்திரை, கடந்த ஜூனில் துவங்கியது. நேற்றுடன், இந்த யாத்திரை முடிவுக்கு வந்தது.

கடும் மழை, வெள்ளம்:

கடும் மழை, வெள்ளம்:

இந்நிலையில், இமயமலைத் தொடருடன் கூடிய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவந்த கடும் மழை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பிற்குள்ளாயினர்.

வெள்ள நீர் குறைவு:

வெள்ள நீர் குறைவு:

தற்போது ஸ்ரீநகர் உட்பட்ட பிற பகுதிகளில் மழை குறைந்துள்ளபடியால் வெள்ளநீரின் அளவும் குறைந்துள்ளது.

தொடர்பு வசதிகள் சீரமைப்பு:

தொடர்பு வசதிகள் சீரமைப்பு:

மேலும் மாநிலத்தின் பிற பகுதிகளில் சேதமடைந்த தொலைதொடர்பு வசதிகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக மீட்கப்பட்டு வருகிறது.

யாத்ரீகர் பாதுகாப்பு:

யாத்ரீகர் பாதுகாப்பு:

மேலும், யாத்ரீகர்களும் பாதுகாப்பாக ஊர் திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

English summary
Jammu and Kashmir flood going to be reduced and people slowly get into their daily life. Also Ketharnath and Manasarovar yathra finished yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X