For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொத்துக் குவிப்பு: ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை! ரூ100 கோடி அபராதம்- முதல்வர் பதவி பறிப்பு!!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Jayalalithaa sentenced to four years imprisonment in assets case
பெங்களூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகாலம் சிறைத்தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, பரப்பன அக்ரஹாரம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். இதனால் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகம் மற்றும் தமிழக-கர்நாடக எல்லையில் சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் தமிழக-கர்நாடக எல்லை மற்றும் பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பரப்பன அக்ரஹார பகுதியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகினர். ஆனால் 11 மணிக்கு தீர்ப்பளிக்கப்படவில்லை. முதலில் பகல் 1 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் பிற்பகல் 2.15 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் பவானிசிங், இந்தவழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்ததாக தெரிவித்தார்.

மேலும் மாலை 3 மணிக்கு ஜெயலலிதா உள்ளிட்டோருக்கான தண்டனைக்காலம் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் மாலை 5 மணியளவில்தான் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அத்துடன் இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டுகாலம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி உடனடியாக பறிபோய்விட்டது.

அதே போல ஜெயலலிதாவின் எம்எல்ஏ பதவியும் உடனடியாக ரத்தாகிவிடும்.

4 ஆண்டு சிறை தண்டனை என்பதால் இந்த நீதிமன்றத்தில் உடனடியாக ஜாமீனும் கிடைக்காது. இதனால் நீதிமன்றத்தில் இருந்து அப்படியே சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

இவர்கள் அடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தான் ஜாமீன் கோர முடியும். ஆனால், அக்டோபர் 5w தேதி வரை தசராவுக்காக கர்நாடகா உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Jayalalithaa sentenced to four years imprisonment in assets case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X