கனிமொழி, ராசா மீதான 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5-க்குள் தீர்ப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2ஜி வழக்கு தொடர்பாக இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி முதல் செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று நீதிபதி ஷைனி தெரிவித்தார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் ரூ.1.70 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரது மீது குற்றச்சாட்டு எழுந்தது.

Judgement will be given by August in 2G spectrum, says O.P.Saini

மேலும் கலைஞர் டிவிக்கு ரூ.214 கோடி கைமாறியது குறித்தும் சிபிஐ துறையும், அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் 2011-ல் சிபிஐ, 2014-ல் அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்தன.

இவ் வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விசாரித்து வருகிறார். இதில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் இருதரப்பும் இறுதிவாதங்களை முன்வைக்க நீதிபதி ஷைனி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து ஆ.ராசா, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர் பெகுரா, ராசாவின் உதவியாளர் சந்தோலியா உள்ளிட்டோர் தமது இறுதி வாதங்களை முன்வைத்தனர். கனிமொழியும் தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார்.

அப்போது நீதிபதி ஷைனி தெரிவிக்கையில், இரு தரப்பினரும் தங்கள் எழுத்துப்பூர்வமான வாதங்களை வரும் 28-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் இந்த வழக்குகளில் தொடர்புடையவர்களின் விளக்கங்கள் வரும் ஜூலை 15-ஆம் தேதி கேட்கப்படும். அதைத் தொடர்ந்து அன்றைய தினமே வழக்கின் தீர்ப்புக்கான தேதியும் அறிவிக்கப்படும் என்றார் நீதிபதி ஷைனி.

எனினும் ஜூலை 15-ஆம் தேதி தீர்ப்பு வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு எப்போது என்று வழக்கறிஞர்கள் நீதிபதி ஓ.பி.ஷைனியிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் ஆகஸ்ட் 25-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும். அவ்வாறு முடியாவிட்டால் அதற்கு அடுத்த 10 நாள்களுக்குள், அதாவது செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஷைனி தெரிவித்தார்.

சுமார் 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கானது இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவு வரும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Judgement in 2G spectrum case will be given in August, says CBI court Judge O.P.Saini.
Please Wait while comments are loading...