சாம்ராஜ் நகர் தொகுதியில் டெபாசிட் இழந்து படுகேவலமாக தோற்ற வாட்டாள் நாகராஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சாம்ராஜ் நகர் தொகுதியில் படுகேவலமாக தோற்ற வாட்டாள் நாகராஜ்..வீடியோ

  பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ் டெபாசிட் இழந்து படுதோல்வியடைந்துள்ளார்.

  கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது.

  இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பாஜக வெற்றி முகத்தில் உள்ளது.

  வாட்டாள் நாகராஜ் தோல்வி

  வாட்டாள் நாகராஜ் தோல்வி

  இந்நிலையில் கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான போராட்டத்தை தூண்டிவிடுவதாக கூறப்படும் வாட்டாள் நாகராஜ் படுதோல்வியடைந்துள்ளார்.

  தமிழில் பேசி வாக்கு சேகரிப்பு

  தமிழில் பேசி வாக்கு சேகரிப்பு

  கன்னட கூட்டமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ், தமிழர்கள் அதிகம் வசிக்கும் சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டார். இதற்காக அந்த தொகுதியில் தமிழில் பேசி வாக்கு சேகரித்தார் வாட்டாள் நாகராஜ்.

  5648 வாக்குகள் மட்டுமே

  5648 வாக்குகள் மட்டுமே

  இந்நிலையில் அந்த தொகுதியில் டெபாசிட் இழந்து படுகேவலமான தோல்வியை சந்தித்துள்ளார் அவர். வெறும் 5648 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்துள்ளார்.

  தாக்குவதில் முன்னிலை

  தாக்குவதில் முன்னிலை

  காவிரி விவகாரத்தில் எப்போதும் தமிழர்களுக்கு எதிராகவும் தமிழகத்துக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர் வாட்டாள் நாகராஜ். தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவது தமிழக லாரி ஒட்டுநர்களை அடித்து துன்புறுத்துவது உள்ளிட்ட செயல்களில் இவரது அமைப்பை சேர்ந்தவர்களே முன்னிலை வகிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Karnataka assembly election result: Vattal Nagaraj, who was contesting Karnataka assembly election, has been defeated.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற