For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனாவை வென்ற மனிதநேயம்.. கோழிக்கோடு விபத்தில் கரம் கோர்த்த கேரளா மக்கள்.. கடும் மழையிலும் உதவி!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை மற்றும் கொரோனா பாதிப்பிற்கு இடையே கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் மக்கள் துரிதமாக உதவிகளை செய்துள்ளனர். வேகமான உதவி மூலம் உயிர் சேதம் அதிகம் ஆகாமல் கேரள மக்கள் தடுத்துள்ளனர்.

Recommended Video

    கேரளா விமான விபத்து | விமான போக்குவரத்து இயக்குநரகம் என்ன சொல்கிறது?

    கோழிக்கோட்டில் நடந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த விபத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர்.

    நேற்று துபாயில் இருந்து வந்த விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் வழுக்கி ஓடி , இரண்டாக பிளந்து விபத்திற்கு உள்ளாகி உள்ளது. மழை காரணமாகவும், குறுகிய விமான ஓடுபாதை காரணமாகவும் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    கோழிக்கோடு.. எரிபொருள் இருந்தும் தரையிறக்கியது ஏன்?.. சந்தேகம் தருகிறது..விமானத்துறை அமைச்சர் கேள்விகோழிக்கோடு.. எரிபொருள் இருந்தும் தரையிறக்கியது ஏன்?.. சந்தேகம் தருகிறது..விமானத்துறை அமைச்சர் கேள்வி

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    இந்த விபத்தில் 18 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இன்னும் பலர் இந்த விபத்தில் பலியாக வாய்ப்புள்ளது என்றுதான் கூறப்பட்டது. ஆனாலும் மக்களை அங்கு உரிய நேரத்தில் வேகமாக உதவி செய்த காரணத்தால் பலி எண்ணிக்கை உயராமல் தடுக்கப்பட்டு உள்ளது. விமானம் விழுந்த செய்தி கேட்டதும் அங்கு மீட்பு பணிக்கு பலர் ஓடி வந்துள்ளனர். அதேபோல் விமானம் விழுந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பலர் அங்கு உதவி செய்ய வந்துள்ளனர்.

    வேகம்

    வேகம்

    பெரிய வெடிப்பு சத்தம் எங்களுக்கு கேட்டது. வெளியே வந்து பார்த்த போது விமான நிலையத்தில் இருந்து புகையாக வந்தது. இதனால் பதறியடித்துக் கொண்டு வேகமாக வந்து மீட்பு பணிகளை தொடங்கினாம் என்று அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். கடும் மழைக்கு இடையிலும் மக்கள் எந்த கவலையும் இன்றி வேகமாக வந்து அங்கு மீட்பு பணிகளை செய்துள்ளனர்.

    அவசர உதவி

    அவசர உதவி

    அதிலும் அங்கு நேற்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து மழை பெய்து சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு இருந்தது. கோழிக்கோட்டில் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு இருந்தது. ஆனால் இதையும் மீறி சக மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்று இரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் வந்துள்ளனர்.

    மக்கள் முக்கியம்

    மக்கள் முக்கியம்

    இப்படி வேகமாக மக்கள் அங்கு வந்த உதவிய வேகத்தில் கொரோனா பாதிப்புகளை எல்லாம் மறந்துவிட்டனர். மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று எந்த விஷயத்தையும் கருத்தில் கொள்ளாமல் மனித தன்மையோடு வேகமாக உதவி செய்துள்ளனர். அதிலும் விபத்து ஏற்பட்ட இடம் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை கொண்ட கிராமங்கள் இருக்கும் இடமாகும்.

    கொரோனா

    கொரோனா

    ஆனாலும் மக்கள் கொரோனாவிற்கு எல்லாம் அச்சப்படாமல் வேகமாக வந்து உதவிகளை செய்து இருக்கிறார்கள். துரிதமாக தீயணைப்பு வீரர்கள், விமானத்துறை அதிகாரிங்களின் அறிவுறுத்தலை கேட்டு மக்களை மீட்டு உள்ளனர். விமானத்திற்குள் சிக்கி இருந்தவர்களை மிக மிக கவனமாக மீட்டு உள்ளனர். இதெல்லாம் போக நேற்று இரவோடு இரவாக மக்கள் ஒன்றாக வந்து ரத்தம் கொடுக்க வரிசையில் நின்று உள்ளனர்.

    இரவிலும் உதவி

    இரவிலும் உதவி

    இரவு 12மணிக்கு கூட அவசரமாக ரத்தம் கொடுக்க இளைஞர்கள் வரிசையில் நின்று உள்ளனர். இதன் மூலம்தான் அங்கு பலி எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் கேரளா முதல்வர் பினராயி விஜயனும் நேற்று நெகிழ்ந்து பாராட்டி இருந்தார். பல இடர்பாடுகளுக்கு இடையே மக்கள் வரிசையாக ரத்தம் கொடுக்க நின்றதே மனித நேயத்திற்கு சரியான சான்று என்று கூறியுள்ளார்.

     பினராயி விஜயன்

    பினராயி விஜயன்

    நாம் இதை பல முறை பார்த்து இருக்கிறோம். கேரளாவில் என்ன அசம்பாவிதம் நடந்தாலும் கேரள மக்கள் முதல் ஆளாக ஒன்றாக வந்து அதை எதிர்பார்ப்பார்கள். போராடுவார்கள். மனித நேயம்தான் நம்மை இணைகிறது. இந்த சமுதாயத்தின் அடித்தளமே அதுதான். மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டு உள்ளார்.

    English summary
    Kozhikode flight accident: People timely help, saved many passengers in the crash yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X