For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடனுக்குடன் சுடச்சுட செய்திகள் தர... பெங்களூரு ஹைகோர்ட்டில் குவிந்த பத்திரிகையாளர்கள்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீது இன்று கர்நாடக ஹைகோர்ட்டில் தீர்ப்பு வழங்கப் பட்டது. தீர்ப்பு விபரங்களை உடனுக்குடன் மக்களுக்குத் தெரியப்படுத்த கோர்ட் வளாகத்தில் பத்திரிக்கையாளர்கள் நேரடி ஒளிபரப்பு உபகரணங்களுடன் குவிந்திருந்தனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான் சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று கர்நாடக ஹைகோர்ட்டில் வழங்கப்பட்டது. தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் தீர்ப்பு என்பதால் தேசிய அளவில் தீர்ப்பு குறித்து பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது.

Lot of reporters gathered in Karnataka high court

தீர்ப்பு வழங்கப்படும்போது நீதிமன்றத்துக்குள் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கர்நாடக மாநில துணை ஆணையாளர் சந்தீப் பாட்டீல் தெரிவித்திருந்தார்.

எனவே, தீர்ப்பு விவரங்களை உடனுக்குடன் மக்களுக்குத் தெரியப்படுத்த பெங்களூரு ஹைகோர்ட் வளாகத்தில் நேரடி ஒளிபரப்பு வாகனங்களுடன் பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்தனர்.

கோர்ட் ஹாலுக்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டதால், அங்கு சுமார் 500 பத்திரிகையாளர்கள் நெருக்கியடித்தபடி நின்று தீர்ப்பை நேரில் கேட்டனர்.

English summary
To update the verdict in Jayalaitha case, so many reporters have gathered in Karnataka high court complex with live equipment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X