For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நல்லவேளையாப் போச்சு.. மங்கள்யானுக்கு அருகே விர்ரென்று பறந்து போன வால் நட்சத்திரம்!

Google Oneindia Tamil News

டெல்லி: செவ்வாய் கிரகத்தில் ஒரு அரிய வானியல் நிகழ்வு நடந்துள்ளது. இந்த அரிய நிகழ்வை இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் பத்திரமான இடத்தில் இருந்தபடி வேடிக்கை பார்த்து ரசித்துள்ளது.

ஸ்லைடிங் ஸ்பிரிங் என்று பெயரிடப்பட்ட வால் நட்சத்திரம், செவ்வாய் கிரகத்தை கடந்து சென்றுள்ளது. இந்த சம்பவத்தால், மங்கள்யான் உள்ளிட்ட செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் வலம் வந்து கொண்டிருக்கும் அனைத்து விண்கலங்களுக்கும் ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.

இந்த வால் நட்சத்திரமானது, ஒரு குட்டி மலை அளவிலான உருவம் கொண்டது. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த வால் நட்சத்திரம் செவ்வாய் கிரகத்தை கடந்து செல்லும்.

Mars Orbiter Mission was closest to comet Siding Spring

ஸ்லைடிங் ஸ்பிரிங் அல்லது C/2013 A1 என்ற பெயர் கொண்ட இந்த வால் நட்சத்திரம், செவ்வாய் கிரக நேரப்படி நேற்று பிற்பகல் 2.27 மணிக்கு கிரகத்தை கடந்து சென்றது. மணிக்கு 2 லட்சத்து 3 ஆயிரம் கிலோமீட்டர் என்ற மின்னல் வேகத்தில் இது கடந்து போனது.

இந்த வால் நட்சத்திரத்தால் மங்கள்யான் விண்கலத்துக்கு எந்தப் பாதிப்பும் வராத வகையில் அதை இஸ்ரோ விஞ்ஞானிகள் பாதையில் மாற்றம் செய்து நிறுத்தியிருந்தனர். இதனால் மங்கள்யான் விண்கலம் எந்த ஆபத்தையும் சந்திக்காமல் தப்பியது.

செவ்வாய் கிரகத்திலிருந்து 1 லட்சத்து 39 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தொலைவில் இந்த வால் நட்சத்திரம் கடந்து சென்றது. இந்த தூரமானது, பூமிக்கும், நிலவுக்கும் இடையிலான தூரத்தில் பாதிக்கும் குறைவானதாகும்.

பெரு்ம் வெளிச்சத்துடன், பிரகாசமாக இந்த வால் நட்சத்திரம் செவ்வாய் கிரகத்தை கடந்து சென்றது.

செவ்வாயைக் கடந்து சென்ற ஸ்லைடிங் வால் நட்சத்திரத்தின் அகலம் ஒரு மைல் ஆகும். நாம் முகத்துக்கு தினசரி பவுடர் பூசிக் கொள்வோமே, அந்த பவுடரின் அடர்த்தி அளவுக்குத்தான் இதன் திடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India's Mars Orbiter mission Mangalyaan witnessed a unique cosmic event on Sunday as Comet Siding Spring flew past the orbiter. A comet the size of a small mountain whizzed past Mars, wowing space enthusiasts with the once-in-a-million-years encounter. Siding Spring (C/2013 A1), made its closest encounter with Mars at 2:27 pm (1827 GMT), racing past the Red Planet at a dazzling 2,03,000 kilometers per hour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X