For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏதோ பெரிய வித்தைக்காரன் போலவே மோடியை பில்டப் செய்கிறார்களே.. சோனியா எரிச்சல்!

|

கோலார், கர்நாடகா: நரேந்திர மோடியை ஏதோ பெரிய வித்தைக்காரர் போலவே பேசி வருகிறார்கள் என்று பாஜகவினரையும், அதன் ஆதரவாளர்களையும் சாடியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார் சோனியா காந்தி. சோனியாவின் பேச்சு....

முகமூடி அணிந்த மோடி

முகமூடி அணிந்த மோடி

மோடியின் உண்மையான முகத்தை பாஜகவினர் மக்களிடம் காட்டவி்ல்லை. மாறாக அவரை பெரிய வித்தைக்காரர் போலவும், அற்புதங்களை நிகழ்த்தப் போகிறவர் என்பது போலவும் முகமூடி அணிவித்து காட்டி வருகின்றனர்.

சிறிய விஷயத்தை பெரிதாக்கி ஊதி...

சிறிய விஷயத்தை பெரிதாக்கி ஊதி...

சிறிய விஷயத்தையும் கூட சிலர் ஊதிப் பெரிதாக்குகிறார்கள். எதுவுமே நடக்காத ஒரு மாநிலத்தில் ஏதோ, எல்லாமே நடந்து வருவதாக காட்டிக் கொள்கிறார்கள்.

வெறும் விளம்பரங்கள்தான்

வெறும் விளம்பரங்கள்தான்

வெறும் விளம்பரங்களை வைத்து கதையை ஓட்டி வருகிறார்கள். உண்மைகளை மறைத்து பொய்களை விளம்பரப்படுத்துகிறார்கள்.

இவரே எல்லாவற்றையும் தீர்த்து விடுவது போல

இவரே எல்லாவற்றையும் தீர்த்து விடுவது போல

ஏதோ இவரே நாட்டின் அனைத்துத் துயரங்களையும் தீர்க்கப் பிறந்தவர் போல ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.

குஜராத் பெண்களின் நிலை

குஜராத் பெண்களின் நிலை

குஜராத்தில் பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அதைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் எத்தனை விதமான சித்திரவதைகளை அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இதுதான் உண்மையான குஜராத்.

மனங்களைப் பிரித்தவர்கள்

மனங்களைப் பிரித்தவர்கள்

அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமையைப் பார்ப்பவர்கள் அல்ல. மாறாக மனங்களை பிளப்பவர்கள். சகோதரச் சண்டையை மூட்டி விடுபவர்கள். அதை வேடிக்கை பார்ப்பவர்கள். இப்படிப்பட்டர்கள்தான நாட்டைக் கட்டிக் காக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா... என்றார் சோனியா காந்தி.

English summary
Training her guns on BJP’s prime ministerial candidate Narendra Modi, Congress president Sonia Gandhi on Wednesday charged that he was being projected with his “true face” hidden behind a mask and as a “magician” who could cure all ills of the country. Without naming Mr. Modi, Ms. Gandhi also made a stinging attack on the Gujarat model of development being touted by him, saying some people had the habit of projecting “small things in a big” way as if no good work is happening in other states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X