For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பரதக்கலைஞர் மிருணாளினி சாராபாய் காலமானார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

அலகாபாத்: பழம்பெரும் பரதநாட்டிய கலைஞர் மிருணாளினி சாரபாய் 97, வயது முதிர்வு காரணமாக அகமதாபாத் இல்லத்தில் இன்று காலமானார். கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்த மிருணாளினி, அறிவியல் விஞ்ஞானி விக்ரம் சராபாயின் மனைவியாவார்.

Mrinalini Sarabhai passes away

பரதக்கலைஞர்களால் அன்போது 'அம்மா' அழைக்கப்படும் மிருணாளினி சரபாய், அகமதாபாத்தில் தர்பனா கலை அகாடமியின் நடத்தி வந்தார். இதன் மூலம் சுமார் 1800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரதம், கதகளி, போன்ற பாரம்பரிய கலைகளில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ போன்று எண்ணற்ற விருதுகளை பெற்றவர்.

வயது முதிர்வு காரணமாக இன்று காலையில் மிருணாளினி இன்று உயிரிழந்ததை அவரது மகளும் பிரபல பரதநாட்டிய கலைஞருமான மல்லிக்கா சரபாய் தனது முகநூல் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அகமதாபாத் காந்திநகரில் உள்ள மிருணாளினியின் பண்ணை வீட்டில் அவரது இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

English summary
Noted danseuse and Padma Bhushan recipient Mrinalini Sarabhai passed away today morning in Ahmedabad. She was 97.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X