For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பையில் திடீர் மின் தடை

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் டாடா பவர் நிறுவனத்தின் மின் உற்பத்திப் பிரிவில் ஏற்பட்ட திடீர் பழுதால் அங்கு 500 மெகாவாட் மின்சார உற்பத்தி நின்று போனது.

இதனால் இன்று காலை முதல் மும்பையின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகள் பலவற்றில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.

இன்று மாலையில் நிலைமை சரியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 சதவீதம் மின் தடை:

40 சதவீதம் மின் தடை:

இந்த திடீர் பழுது காரணமாக மும்பையின் 40 சதவீத பகுதிகளில் மின்சாரம் இல்லை. இதனால் பகுதி வாரியாக மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

திடீர் பழுது:

திடீர் பழுது:

இதுகுறித்து டாடா பவர் கம்பெனி வெளியிட்ட அறிக்கையில், இன்று காலை 9.45 மணஇக்கு மின் சப்ளை பாதிக்கப்பட்டது. டிராம்பே மின் உற்பத்தி நிறுவனத்தின் 5 ஆவது பிரிவில் ஏற்பட்ட பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

முக்கிய பகுதிகள்:

முக்கிய பகுதிகள்:

இதன் காரணமாக பரேல், மகாலஷ்மி, தாராவி, செம்பூர், ஜிஆர் ரோடு, ஆகி பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

சரி செய்ய முயற்சி:

சரி செய்ய முயற்சி:

இதை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விரைவில் இது சரியாகும் என்று எதிர்பார்க்கிறோம். மும்பை நகர் முழுவதும் மின் சப்ளை விரைவில் சரியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணியளவில் நிலைமை சரியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மின் விநியோகம்:

மின் விநியோகம்:

டாடா நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தைப் பெற்று மும்பையின் வேறு சில புகுதிகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் மின் விநியோகம் செய்கிறது.

பகுதி நேர மின் தடை:

பகுதி நேர மின் தடை:

தற்போது டாடாவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், ரிலையன்ஸ் தான் விநியோகிக்கும் பகுதிளான செம்பூர், பந்த்ரா, குர்லா, சான்டா குரூஸ், ககோத்பர், திகார் நகர், விக்ரோலி, சகி நகரா, ஜூஹு ஆகிய பகுதிகளில் பகுதி நேர மின்தடையை அமல்படுத்தியுள்ளது.

லிப்ட்களும் இயங்கவில்லை:

லிப்ட்களும் இயங்கவில்லை:

இந்த மின் தடை காரணமாக பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் லிப்ட்கள் இயங்கவில்லை. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

நிலக்கரி பற்றாக்குறை:

நிலக்கரி பற்றாக்குறை:

நிலக்கரி பற்றாக்குறையே மின் தட்டுப்பாட்டுக்குக் காரணமாக இருக்கும் என்று மகிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்திரா டிவிட் செய்துள்ளார்.

English summary
All of south Mumbai and parts of central Mumbai are without power on Tuesday after a unit of Tata Power tripped. Nearly 40 per cent of the city has been hit, according to media reports.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X