For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமான பயணிகள் உடன் கொண்டு செல்லும் 'பேக்'களுக்கும் லக்கேஜ் கட்டணம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: விரைவில் விமானத்தில் செல்வோர் தங்களுடன் செல்லும் பொருட்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று சிவில் விமான இயக்குநர் ஜெனரல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பொருட்கள் ஏற்றிச் செல்ல கட்டணம் வசூலிக்கப்படாது. எக்கனாமி கிளாசில் தற்போது 15 கிலோ வரையிலான லக்கேஜ்களை உடன் கொண்டுசெல்ல அனுமதியுள்ளது. அதற்கு மேற்பட்ட எடை கொண்டவற்றுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

No more free check-in baggage in airlines

ஆனால், இனிமேல், சாதாரண லக்கேஜ்களுக்கும், வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய விமான பயணிகள் சங்க தலைவர் சுதாகர ரெட்டி இதுகுறித்து கூறுகையில்: இது மோசமான நடவடிக்கை. இந்த நடவடிக்கை பயணிகளைதான் மேலும் பாதிக்கும்.

சீட் தேர்வு மற்றும் டிக்கெட் கேன்சலுக்கு ஏர்லைன்ஸ் அதிக கட்டணம் வசூலிக்கும் நிலையில், புதிய கட்டணமும் சரியில்லை என்று அவர் தெரிவித்தார். இண்டிகோ, ஏர்ஏசியா, ஸ்பைஸ் ஜெட் போன்ற நிறுவனங்கள் விமான ஒழுங்குமுறை ஆணையத்திடம் இந்த திட்டத்திற்கு அனுமதியளிக்க கோரியுள்ளனவாம்.

English summary
Airlines had sought permission to abolish the concept of free baggage and instead incentivise those passengers who travel without any luggage through discount in fares, said a senior DGCA official, who did not want to be identified.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X