ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முதல்முறையாக மார்க்கர் பேனா அறிமுகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் நானை வாக்களிக்க செல்லும் இடத்தில் பேனா கொண்டு செல்ல எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக தேர்தல் ஆணையம் கொடுக்கும் மார்க்கர் பேனா மூலம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதிக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. அதற்காக நாடாளுமன்றம் மற்றும் தலைமை செயலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

No pen should be carry for Presidential election

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வாக்களிக்க அழியாத மை பயன்படுத்தப்பட்டு வந்தது. ஊதா நிறத்திலான பேனாக்கள் மூலம் எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளர்களின் பெயரை வாக்குச் சீட்டில் வரிசைப்படுத்தி எழுதிவந்தனர்.

ஆனால் நாளை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க அழியாத மைக்கு பதிலாத மார்க்கர் பேனா பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த பேனாக்கள் மைசூர் பெயிண்ட் மற்றும் வார்னிஷ் என்ற கர்நாடக அரசு நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டனா.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க செல்லும் போது எம்பி மற்றும் எம்எல்ஏ-க்கள், தேர்தல் அலுவலர்களிடம் தங்களது பேனாக்களை ஒப்படைத்துவிட்டு வாக்களிப்பதற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ள மார்க்கர் பேனாவை கொண்டு செல்ல வேண்டும்.

வாக்களித்து திரும்பும்போது மார்க்கர் பேனாவை ஒப்படைத்துவிட்டு தங்கள் பேனாக்களை பெற்று செல்லலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In a first, the Election Commission (EC) has decided to use a special marker pen for voting in the Presidential election to be held on tomorrow.
Please Wait while comments are loading...