For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாத்ரி முதியவர் படுகொலையைவிட சித்துவின் உடல்நிலைதான் முக்கியமோ? மோடியை சாடும் ஒமர் அப்துல்லா

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மதவெறியர்களால் தாத்ரியில் இஸ்லாமிய முதியவர் இக்லால் படுகொலை செய்யப்பட்டது குறித்து எந்த ஒரு கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருக்கும் பிரதமர் மோடிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்துவின் உடல்நிலை குறித்தி கருத்து தெரிவிப்பதுதான் முக்கியமா என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா சாடியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி உண்டதாக வதந்தியை கிளப்பி இஸ்லாமிய பெரியவர் இக்லால் மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது.

Omar Abdullah slams PM Modi on Dadri lynching

ஆனால் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். சமூகவலைதளங்களை அதிகம் பயன்படுத்துகிற பிரதமர் மோடிக்கு தாத்ரி படுகொலை இன்னும் கண்ணில்தென்படவில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாம் சிகிச்சை பெற்றுவருவது குறித்து ட்விட்டரில் சித்து பதிவிட்டிருந்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து, நலமுடன் திரும்ப வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இதைக் குறிப்பிட்டிருக்கும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, பிரதமருக்கு தாத்ரி படுகொலையைவிட சித்துவிடன் உடல்நிலைதான் முக்கியமா? என கண்டனம் தெரிவித்துள்ளார்.

English summary
Jammu and Kashmir Former chief minister Omar Abdullah slammed PM Modi on Dadri lynching row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X