26 வயசு.. வேலைக்கு போன ஐடி ஊழியர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 10 பேர் சேர்ந்து.. கொடூர சம்பவம்

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் 26 வயது பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்து சுமார் 40 மணி நேரம் ஆகியும் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படாததால் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

இது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களே வலியுறுத்தியுள்ளனர்.

கூட்டு பாலியல் பலாத்காரம்

கூட்டு பாலியல் பலாத்காரம்

ஜார்கண்ட் மாநிலத்தின் சாய்பாசாவில் 26 வயது இளம்பெண் ஒருவர் 10 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் சாஃப்ட்வேர் இன்ஜினயராவார். இவர் கடந்த வியாழக்கிழமை மாலை அவரது நண்பருடன் பழைய விமான தளம் இருந்த பகுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 10 பேர் இளம்பெண்ணின் நண்பனை அடித்து போட்டுவிட்டு பெண்ணை மறைவான இடத்திற்கு கொண்டு சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

கைது செய்யப்படவில்லை

கைது செய்யப்படவில்லை

பின்னர் அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு அவரிடமிருந்த செல்போன் மற்றும் ஹேன்ட் பேகையும் பறித்து சென்றுள்ளனர். அங்கிருந்து மீண்டு வந்த அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக முஃபசில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் சம்பவம் நடந்து 40 மணி நேரத்திற்கும் மேல் ஆன நிலையில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லையென்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து பாஜக தலைவர்கள் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர்.

விமர்சனம்

விமர்சனம்

கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 5,000 பாலியல் பலாத்கார குற்றங்கள் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷாதேவ் கூறுகையில், "இந்த குற்ற வழக்குகளில் தற்போது வரை வெறும் 1% குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை உடனடியாக கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று காங்கிரஸ் கட்சியை வலியுறுத்தியுள்ளார்.

கண்டனம்

கண்டனம்

சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில காங்கிரஸ் எம்பி கீதா, இது குறித்து முதலமைச்சர் ஹேமந்த் சோரனை சந்தித்து பேச இருப்பதாக கூறியுள்ளார். சந்திப்பின் போது, இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக பேச உள்ளதாகவும் கூறியுள்ளார். அதேபோல அம்மாநில காங்கிரஸ் தலைவர் அலோக் துபே, இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+