இத்தனை செய்திருக்கேன்..மீண்டும் ஜெயிப்பேன்..சுதந்திர தின உரையில் நம்பிக்கையுடன் தெறிக்க விட்ட மோடி!
டெல்லி: நான் மீண்டும் வருவேன் என்ற அர்த்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையை ஆற்றியுள்ளார்.
இன்று 72-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லியில் செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்தார். இது மோடியின் 5-ஆவது உரையாகும்.
அடுத்த ஆண்டு மே மாதம் லோக்சபா தேர்தல் வரும் நிலையில் மோடியின் சுதந்திர தின உரை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் அவர் 80 நிமிடங்கள் கொண்ட நீண்ட உரையை ஆற்றினார்.

நீண்ட பேச்சு
அவர் கடந்த நான்கு ஆண்டுகளில் தான் செய்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் தான் காட்டும் ஆர்வம், அக்கறை, தீவிரம், இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளது உள்ளிட்டவற்றை நீண்ட நெடிய பேச்சில் குறிப்பிட்டார்.

நம்பிக்கை
இவ்வாறு விரிவாக விளக்கமாகப் பேசியதன் மூலம் மீண்டும் அந்த 2014-ஆம் ஆண்டு நம்பிக்கையை பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார். மீண்டும் தான் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்ற நம்பிக்கையும் இந்தப் பேச்சின் மூலம் அவர் உணர்த்தியுள்ளார்.

ஆட்சி கட்டிலில்
தான் மீண்டும் வருவேன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். மேலும் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவர் என்று கூறியிருப்பதால் அடுத்த தேர்தலிலும் பாஜகவே ஆட்சி கட்டிலில் அமரும் என்று கூறியுள்ளார்.

நத்தை வேகத்தில்
குக்கிராமங்களுக்கும் மின்சாரம், எரிவாயு உருளை, கழிப்பறைகள், வீட்டு வசதி, மேம்படுத்தப்பட்ட சாலைகள், மருத்துவ காப்பீடு ஆகியவற்றையும் பிரதமர் நினைவுக்கூர்ந்தார். மேலும் கடந்த 70 ஆண்டுகளாக நத்தை வேகத்தில் இருந்த வளர்ச்சி திட்டங்கள் மிகவும் குறுகிய காலத்திலேயே அதாவது 4 ஆண்டுகளிலேயே பாஜக அரசால் கொண்டு நிறைவேற்றப்பட்டது என்றார்.

கடைசி உரை
இத்தனை நாட்களாக பயனாளிக்கு செல்லாத மானியங்கள் தற்போது வங்கிக் கணக்கில் முறைப்படி செலுத்துவதன் மூலம் ரூ. 90 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. பொது தேர்தலுக்கு முன்பு மோடியின் கடைசி சுதந்திர தின உரை என்கிற போதிலும் அவர் எதிர்க்கட்சிகளை நேரடியாக தாக்கி பேசவில்லை.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!