அப்போ ஜிமிக்கி கம்மல் ஷெரில், இப்போ பிரியா வாரியரின் புருவ டான்ஸ்... இணையத்தை கலக்கும் சேச்சிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஒரே நாளில் டிரெண்டில் இடம்பிடித்த பிரியா-வீடியோ

  திருவனந்தபுரம் : ஜிமிக்கி கம்மல் ஷெரில் போல இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது பிரியா பிரகாஷ் வாரியரின் புருவ டான்ஸ். உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த இளம் நடிகையின் முகபாவனை ப்ரமோ ஓவர்நைட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்களை பிரியாவிற்கு தந்துள்ளது.

  ஜிமிக்கி கம்மல் பாடல் மூலம் மிகப் பிரபலமானார் ஷெரில், கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் புகழ் மறைந்து வரும் நிலையில் ஷெரிலை போல அடுத்த சமூக வலைதள முகமாக மாறி இருக்கிறார் இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இந்த இளம் நடிகை உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்துள்ளதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா.

  மலையாளத்தில் ஒரு அடார் லவ் என்ற படத்தில் நடித்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர். இந்தப் படத்தின் ப்ரமோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வரும் ஒரு சீன் மக்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது. இந்த ப்ரமோவில் ப்ரியா காட்டும் முகபாவனைகள் தான் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

  இணையத்தில் சென்சேஷனான பிரியா வாரியர்

  இணையத்தில் சென்சேஷனான பிரியா வாரியர்

  ஷான் ரஹ்மான் இலையில், வினீத் ஸ்ரீனிவாசன் பாடியுள்ள பாடலின் டீசர் வெளியிடக்கட்டுள்ளது. இந்தப் ப்ரைமோ வெளியானது முதல் இணையதள சென்சேஷன் ஆகி இருக்கிறார் பிரியா பிரகாஷ் வாரியர்.

  என்னா புருவ டான்ஸ்பா?

  புருவங்களாலேயே காதலுக்கு சம்மதம் சொல்லும் பிரியாவாரியரின் எக்ஸ்பிரஷன் அனைவரையும் ஈர்த்துள்ளது. மாடல் நடிகையான பிரியா மலையாள திரையுலகில் நடிகையாக வலம்வரத் தொடங்கியுள்ளார்.

  ப்ரியா சேச்சி நன்றி

  ப்ரியா சேச்சி நன்றி

  தன்னுடைய ப்ரமோவிற்கு மக்கள் ஆதரவு அளித்திருப்பதற்கு பிரியா முகநூல் பக்கத்தில் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதே போன்று படத்தையும் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும் ப்ரியா சேச்சி கேட்டுக் கொண்டுள்ளார்.

  பிரியாவுக்கு சமூகவலைதளத்தில் மவுசு

  பிரியாவுக்கு சமூகவலைதளத்தில் மவுசு

  திரிச்சூரைச் சேர்ந்த 18 வயது பிரியா வாரியர் பிகாம் படித்து வருகிறாராம். பேஸ்ஃபுக், இன்ஸ்டாகிராமில் தீவிரமாக செயல்பட்டு வரும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 777 ஆயிரம் பாலோயர்கள் உள்ளனராம். டுவிட்டரில் நேற்று தான் அடியெடுத்து வைத்தவருக்கு முதல்நாளே 15 ஆயிரம் ஃபாலோயர்கள் கிடைத்துவிட்டனர்.

  குஷியில் பிரியா வாரியர்

  குஷியில் பிரியா வாரியர்

  ஷெரில் போல பிரியா வாரியருக்கும் தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளதால் உற்சாகத்தில் இருக்கிறாராம் இந்த இளம் நடிகை. ப்ரமோவிற்கே ரசிகர்கள் அளித்த உற்சாக வரவேற்பால் தனது நடிகை கனவு நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் பிரியா.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  People seem to have moved on from Jimikki Kammal's Sheryl, but they have found Priya Prakash Varrier now. Her film Oru Adaar love promo song makes her internet sensational figure.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற