செல்வக் கடவுளான லட்சுமியையே யாசகம் கேட்கவிட்ட பாஜக... ராஜ்தாக்கரேவின் நெத்தியடி கார்ட்டூன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : பாஜக ஆட்சியில் லட்சுமியும் யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்ட விட்டதாக மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே கிண்டலான கார்ட்டூனை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற பொருளாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை அடுத்தடுத்து கொண்டு வந்தன. இதன் விளைவாக இந்திய பொருளாதாரம் மந்த நிலையை எட்டியுள்ளது. எனினும் இது தற்காலிக மந்த நிலை தான் 2018ல் இந்த மந்த நிலை சீரடையும் என்று பாஜக கூறி வருகிறது.

 RajThackeray's timely cartoon with Lakshmi

இந்நிலையில் பாஜகவை விமர்சிக்கும் விதமாக மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே கிண்டலான கார்ட்டன் ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தீபாவளிப் பண்டிகையின் முக்கிய நிகழ்வான லட்சுமி பூஜை நேற்று வடமாநிலங்களில் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு ராஜ்தாக்கரே பாஜக அரசைத் தாக்கி வரைந்துள்ள கார்ட்டூனில் லட்சுமியே காசிற்காக பிரதமர் மோடியிடமும், அமித்ஷாவிடமும் கையேந்தி நிற்கிறார். தேசத்தை வழிநடத்த கொஞ்சம் பணம் கொடுத்து உதவுங்கள் என்பது போன்ற வசனமும் அதில் இடம்பெற்றுள்ளது.

கையில் காசு கொட்டும் கடவுளே எதிரே பிரதமர் மோடியம், பாஜக தலைவர் அமித்ஷாவும் இருப்பதை பார்த்து காசு கேட்டு மன்றாடுகிறார். அப்படியானால் நாட்டின் பொருளாதாரம் அந்த அளவிற்கு திண்டாட்டம் கண்டுள்ளது என்பதை ராஜ்தாக்கரே வெட்டவெளிச்சமாக்கியுள்ளார் இந்த கார்ட்டூன் மூலம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Maharashtra NavaNirman Sena chief Raj Thackeray's special cartoon on the day of Lakshmi Pooja diretly attacking BJP's poor economy measures.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற