For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2017 ஆம் ஆண்டில் நீங்கள் அவசியமாக மலேசியா/ கோலாலம்பூர் க்கு செல்ல வேண்டும் என்பதற்கான 7 காரணங்கள்!!

நீங்கள் வித்தியாசமான பயண அனுபவத்தை பெற வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் மலேசியாவை பார்க்க வேண்டும். இந்த அழகிய தீவு பல்வேறு கலாச்சாரங்களை பெற்றது.

By Super Admin
Google Oneindia Tamil News

"மலேசியா- ஆசியாவின் அசல்"

நீங்கள் வித்தியாசமான பயண அனுபவத்தை பெற வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் மலேசியாவை பார்க்க வேண்டும். தாய்லாந்திற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் இருக்கும் இந்த அழகிய தீவு பல்வேறு கலாச்சாரங்களை பெற்றது.

அங்கே பலவிதமான கண்ணைக் கவரும் பீச், கடற்கரை உணவகங்கள் ஆகியவை நீங்கள் இழந்த புத்துணர்வை மீட்டுத்தரும். மனதிற்கு அமைதி தரும் . உங்கள் துணையோடு போவதற்கான சிறந்த இடம் மலேசியாவாக இருக்கும்.

மலேசியாவின் தலை நகரான கோலாலம்பூரில் ரசனையாக வடிவமைத்த உயரமான கட்டடங்களும், தனித்துவமான கலாச்சார முறைகளும் நமது மனதை கொள்ளையடிக்கும்.

அப்படி உங்கள் கண்ணை கவரும் இடங்கள் எவையென பார்க்கலாமா?

பட்டு குகை - மலேசியா :
இந்த குகை சேலங்கோரிலுள்ள கோம்பக் என்னுமிடத்தில் அமைந்துள்ளன. அங்குள்ள முருகன் சிலை உலகிலேயே மிக உயரமான சிலையாகும். இது பெருமை வாய்ந்த இடமாக மலேசியாவில் உள்ளது.

important tourist spots in malaysia

ஃப்ரேசெர்- ஹில்ஸ் :
கோலாலம்ப்பூரிலிருந்து 2 மணி நேர பயணத்தில் நாம் ஃப்ரேசேர் ஹில்ஸ் அடையலாம். இது பகாங்க் மலைத்தொடரில் அமைந்துள்ளது. வெளி நாட்டவர்களுக்கு மிகவும் விருப்பமான இந்த மலைப் பகுதி மிகவும் பிரபலமானதாகும்.

important tourist spots in malaysia

தியான் ஹூ கோவில் :
இது ஆசியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சீன கோவிலாகும். மாஜு என்ற பெண் தெய்வத்திற்காக கட்டப்பட்டது. இது கோலாலம்பூரிலுள்ள ஜலன் சியத் புத்ராவில் அமைந்துள்ளதி இக்கோவில்.

important tourist spots in malaysia

பெனாங்க் பீச் :
வெள்ளை மணல், நீல கடல் பார்க்க விருப்பமென்றால் நீங்கள் கட்டாயம் பாக்க வேண்டிய இடம் பெனாங்க் பீச். இது ரம்மியமான இடம். உங்கள் துணையுடன் போவதற்கான சிறந்த இடம். இது மலேசியாவின் வடமேற்கு பகுதில் அமைந்துள்ளது.

பெட்ரோனாஸ் டவர் :
பெட்ரோனாஸ் டவரை இரட்டை கோபுரம் என்றும் அழைப்பார்கள். இதுவும் உலகப் புகழ் பெற்றது. உலகிலேயே மிக உயரமான இரட்ட்டை கோபுரம் தர்போது இதுதான். இந்த டவரிலும் ஜாக்கிங்கிற்கான வழிப்பாதை, நடப்பதற்கான வழி, மற்றும் நீச்சல் குளம் என மகிழ்விக்க ஏறாளம் உள்ளது.

கொண்டொலா லிஃப்ட் :
இது அந்தரத்தில் செல்லக் கூடிய மிகவும் பாதுகாப்பான வழிப்பாதையாகும். இது கொடோங்க் ஜெயா மற்றும் கோலாலம்பூரையும் இணைக்கிறது. சுமார் 2000 பேரை ஒரு மணி நேரத்தில் பயணம் மேற்கொள்ளலாம். இந்த பயணத்தையும் மலேசியா செல்லும் ஒவ்வொருவரும் அனுபவித்தால் சிறப்பு.

ஏர் ஆசியா :

இந்த அற்புத மலேசியாவிற்கு நாம் செல்வதற்கு இன்னொரு மிக முக்கிய காரணம் ஏர் ஆசியா விமானம் தான். கச்சிதமான பயணம். குறையில்லாத பாதுகாப்புடன் கூடிய இனிமையான பயணத்தை ஏர் ஏசியா தருகிறது. முக்கியமாக பயணக் கட்டணங்கள் நமக்கு வியக்கும் வகையில் சலுகைகளை ஏர் ஆசியா தருவதால், போக்குவரத்து செலவு நம் கையை பதம் பார்க்காது . நீங்களும் ஒருமுறை சென்று பார்த்துவிடுதான் வாங்களேன்.

இன்னும் என்ன பண்றீங்க? இப்பவே ஏர் ஆசியாவில் டிக்கட் புக் பண்ணுங்க!!

English summary
Here are 7 reasons why visiting Malaysia/Kuala Lumpur should be on your must-see list in 2017. With amazing deals by AirAsia, Kuala Lumpur is definitely a must-visit place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X