பிட்காயினுக்கு போட்டியாக ஜியோ காயின்... ரிலையன்ஸ் அதிரடி திட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் தலைமையில் ஜியோகாயின் திட்டத்தை செயல்படுத்த புதிய குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோ நிறுவனம் சமீபகாலமாக பல்வேறு அதிரடி சலுகைகளை அறிமுகம் செய்து தொலைதொடர்பு துறையில் பல சாதனைகளை செய்து வருகிறது.

Reliance jio is planning to introduce Jio coin

இந்நிலையில் வர்த்தகத்தில் தற்போதைய சென்ஷேனலாகவுள்ள பிட்காயின் போல தனியாக கிரிப்டோ கரன்சியை அறிமுகம் செய்ய ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பொதுவான வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனைகளுக்கு நேரெதிரான மற்றும் முற்றிலும் இணையம் சார்ந்த மின்னணு பணப்பரிவர்த்தனை தான் கிரிப்டோ கரன்சி பிட்காயினானது. தற்போது ஒரு பிட்காயினின் மதிப்பு 12,500 டாலர்கள் குறைந்திருந்த நிலையில், ஒரு பட்காயினின் மதிப்பு 9 லட்சம் ரூபாய் வரை கணக்கிடப்படுகிறது.

இந்நிலையில் இந்த கிரிப்டோகரண்சி வர்த்தகத்தில் இறங்க ஜியோ முடிவு செய்துள்ளது. முகாஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் தலைமையில் 50 இளம் திறமையாளர்களை கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பிட்காயின் பல வருடங்களாக புழக்கத்திலிருந்தாலும், இந்தியாவில் கடந்த சில மாதங்களாக இதன் தாக்கம் அதிகமாகவுள்ளதால் இந்த வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் இறங்க முடிவு செய்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Reliance jio is planning to introduce Jiocoin. Its said to be Mukesh Ambanis elder son Akash to lead the team of Jiocoin. And the company is planning to take new young team for this project allover the country.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற