For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

15 நாள் லீவ் கேட்ட சசிகலா மனுவை வழக்குகளை காரணம் காட்டி நிராகரித்த கர்நாடகா போலீஸ்!

15 நாட்கள் லீவ் கேட்கும் சசிகலாவின் மனு நிராகரிக்கப்படவே வாய்ப்புகள் உள்ளதாக கர்நாடகா போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

By Raj
Google Oneindia Tamil News

Recommended Video

    சசிகலா 15 நாட்கள் லீவில் வெளியே வர வாய்ப்பு, ஈபிஎஸ் அணி ஆட்சேபம்-வீடியோ

    பெங்களூரு: சசிகலா 15 நாட்கள் லீவ் கேட்டு தாக்கல் செய்த மனுவை அவர் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி கர்நாடகா போலீஸ் நிராகரித்துள்ளது.

    சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. இதையடுத்து அவரை பார்ப்பதற்காக பரோலில் வருகிறார் சசிகலா என தினகரன் கூறியிருந்தார்.

    தென்னிந்தியாவில் நடைமுறை கிடையாது

    தென்னிந்தியாவில் நடைமுறை கிடையாது

    ஆனால் பரோல் என்கிற நடைமுறை தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் இல்லை. பெரும்பாலும் வடகிழக்கு மாநிலங்களில்தான் இருக்கிறது என்கின்றனர் மூத்த வழக்கறிஞர்கள். பரோல் என்பதே தண்டனை கைதிகள் குறிப்பிட்ட ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்ட பிறகு நன்னடத்தையின் கீழ் நீண்டகால விடுமுறையில் அனுப்பி வைப்பது என்பதுதான்.

    1 மாதம் வரை அனுமதி

    1 மாதம் வரை அனுமதி

    அதேநேரத்தில் சாதாரண லீவ் மற்றும் எமர்ஜென்சி லீவ் என்கிற இரு ஆப்சன்கள் கைதிகளுக்கு இருக்கிறது. சாதாரண லீவ் என்பது 3 நாட்களுக்கு மேல் ஒரு மாதம் வரை அனுமதி கோருவது என்பதாகும்; குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த லீவ் கேட்கப்படலாம்.

    3 நாட்கள் அனுமதி

    3 நாட்கள் அனுமதி

    எமர்ஜென்சி லீவ் என்பது அப்பா, அம்மா, கணவர், மனைவி, உடன்பிறந்தோர், குழந்தைகள் ஆகியோர் இறந்தால் கேட்கப்படுவது. இதற்கு 3 நாட்கள் மட்டுமே அனுமதி.

    நிலுவையில்... வழக்குகள்

    நிலுவையில்... வழக்குகள்

    இந்நிலையில் சசிகலா சாதாரண லீவில் அனுமதி கோரி விணப்பித்தார் சசிகலா. அவருக்கு 15 நாட்கள் லீவ் தருவதற்கு பெங்களூரு சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக முதலில் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தற்போது சசிகலா மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி அவரது லீவ் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

    English summary
    According to the sources said that Sasikala who is serving Jail term in Bengaluru likley to get 15 days leave.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X