For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாலிபன் ஆட்சியில் உருவான முதல் சூப்பர் கார்

By BBC News தமிழ்
|

"அமெரிக்கா மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் படைகள் காபூல் பக்ராம் விமான தளத்தில் முகாமிட்டிருந்த காலத்தில், ​​இரவில் பிரமாண்டமான விளக்குகள் எரிந்து கொண்டிருப்பது வழக்கம். என்றாவது ஒரு நாள் நான் என் காரை அந்த விமான தளத்தில் ஓட்டுவேன் என்று நான் கனவு கண்டேன்."

"இது எனக்கு ஒரு கனவாகத் தான் தோன்றியது, அது நிறைவேறும் என்ற நம்பிக்கையில்லை. ஆனால் இப்போது அது நனவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கம் எனது காரை பக்ராம் விமான தளத்தில் காட்சிப்படுத்தியது, நான் கனவு கண்டதைப் போல் அந்த ஒளி வெள்ளத்தில் எனது கார்”

இந்தக் கனவு காபூலைச் சேர்ந்த பொறியாளரான முஹம்மது ரஸா அஹ்மதியினுடையது. அவர் போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் தனது முதல் 'சூப்பர் காரை' வடிவமைத்துள்ளார்.

என்டாப் எனப்படும் உள்ளூர் வடிவமைப்பு ஸ்டுடியோவின் சமூக ஊடகப் பக்கத்தில் அவரது வீடியோ செய்தி இருக்கிறது. என்டாப் கார் டிசைன் ஸ்டுடியோ ஆப்கானிஸ்தானின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்தக் காரை வடிவமைத்துள்ளது.

முஹம்மது ரஸா அஹ்மதியுடன் தொலைபேசியில் பேச முயற்சி மேற்கொள்ளப்பட்டது, ஆனால் அவரது செயலாளர் பின்னர் பதிலளிப்பதாகக் கூறினார், ஆனால் இதுவரை அவர் தரப்பிலிருந்து எந்தத் தொடர்பும் இல்லை. ஆப்கானிஸ்தானில் இதுவரை வாகனத் தயாரிப்புத் தொழில் இல்லாததால், இந்த சூப்பர் காரை உருவாக்கும் யோசனை அவருக்கு எப்படி வந்தது, அதற்கான தொழில்நுட்பம் மற்றும் உதிரிபாகங்களை எங்கிருந்து பெற்றார் என்பதை அவரிடமிருந்து அறிய விரும்பினோம்.

10 முதல் 12 பேர் கொண்ட குழு இந்த வாகனத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதாக முஹம்மது ரஸா அஹ்மதியின் செயலாளர் தொலைபேசியில் தெரிவித்தார். இது ஒரு ப்ரோடோடைப் ஸ்போர்ட்ஸ் கார் என்றும் டொயோட்டா இன்ஜின் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஃப்கானிஸ்தான்: தாலிபான் ஆட்சியில் உருவான சூப்பர் கார்
Getty Images
ஆஃப்கானிஸ்தான்: தாலிபான் ஆட்சியில் உருவான சூப்பர் கார்

இதுவரை 40 முதல் 50 ஆயிரம் டாலர் செலவு’

ஆப்கானிஸ்தானின் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் தலைவரான மௌல்வி குலாம் ஹைதர் ஷஹாமத், ஆப்கானிஸ்தானில் இருந்து பிபிசியிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர், இந்த வாகனத்தின் பணிகள் ஐந்து ஆண்டுகளாக நடந்து வருவதாகவும், அதாவது, கடந்த அரசாங்கத்தில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாகவும், ஆனால் இந்த வேலை முடிக்கப்படவில்லை எனவும் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தக் கார் தயாரித்து முடிக்கப்பட்டதாகவும் கூறினார்.

இதற்கு முன் 50 சதவீத பணிகள் மட்டுமே நடந்ததாகவும், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சி அமைந்தபோது முஹம்மது ரஸா அஹ்மதி 8 மாதங்களுக்கு முன்பு தனது அமைப்பை தொடர்பு கொண்டு, அதைச் செயல்படுத்திப் பணிகள் தொடங்கப்பட்டுத் தற்போது பல பணிகள் நடந்துள்ளதாகவும் அவர் கூறினார். அது முடிந்துவிட்டது, ஆனால் உட்புற வேலைகள் முழுமையடையவில்லை.

'இந்த வாகனத்திற்கு இதுவரை 40 முதல் 50 ஆயிரம் டாலர்கள் வரை செலவாகியுள்ளது' என்றும், உட்புறத்தை வடிவமைத்து முடிக்க மேலும் செலவாகும் என்றும் அவர் கூறினார்.

இந்தக் காரைத் தயார் செய்து உலகில் காட்சிப்படுத்தவும், ஆப்கானிஸ்தானின் முன்னேற்றம் மற்றும் பிரகாசமான எதிர்காலத்தைக் காட்டவும் முயற்சி செய்வேன் என்று கூறினார்.

இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள வாகனக் கண்காட்சியில் இந்த வாகனத்தையும் பங்கெடுக்க வைக்க ஆப்கானிஸ்தான் அரசும் முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

https://twitter.com/suhailshaheen1/status/1612899265549946881?s=20&t=OzL--0h1L2Xd8nt4diyUug

வாகனம் காட்சிப்படுத்தப்பட்ட போது...

கடந்த ஆண்டு நவம்பரில் இந்த வாகனத்தின் படங்கள் மற்றும் சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தாலும், சில நாட்களுக்கு முன்பு தான் இது ஆப்கானிஸ்தானில் காட்சிப்படுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் பிரதிநிதியாகப் பரிந்துரைக்கப்பட்ட சுஹைல் ஷஹீன், மூன்று நாட்களுக்கு முன்பு ட்வீட் செய்தார். இதில் ஆப்கானிஸ்தான் பொறியாளர் தயாரித்த வாகனத்தின் செயல்திறன் குறித்து ட்வீட் செய்துள்ளார். ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்காக நாட்டின் அனைத்து இளைஞர்களும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்றும் அவர் அதில் கோரியிருந்தார்.

ஆப்கானிஸ்தானின் தகவல் துறையின் தலைவர் ஜபிஹுல்லா முஜாஹித் இந்தப் பணியைப் பாராட்டியுள்ளார்.

சமூக வலைதளங்களில் பலரும் இப்பணியை பாராட்டி 40 ஆண்டுகளாக போர் நடந்து வரும் நாட்டில் இப்படிப்பட்ட திறமைசாலிகளும் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம், பல விமர்சகர்கள் அடிப்படையில் இந்த வாகனத்தில் உள்ள பாகங்கள் மற்ற வாகன நிறுவனங்களின் தயாரிப்புகள் அல்லது அவற்றை மாற்றியமைத்து உருவாக்கப்பட்டவை என்றும் ஆப்கானிஸ்தான் தங்கள் நாட்டில் பாகங்களைத் தயாரிக்க முயற்சிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

முஹம்மது ரஸா அஹ்மதி மற்றும் அவரது பங்குதாரர் நிறுவனமான என்டாப் ஆகியோரின் சமூக ஊடகப் பக்கங்களில் வாகனத்தின் தயாரிப்பின் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது, வாகனத்தின் பிரதான பகுதிகள் மற்றும் பாகங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது இதில் காட்டப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
The First supercar made by the taliban
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X