For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அந்த 100 கோடி பேரும் சிகரெட்டை நிறுத்துங்க...

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மும்பை: உலகம் முழுவதும் 100 கோடி பேருக்கு மேற்பட்டோர் புகைப் பழக்கமும், 24 கோடி பேருக்கு மேற்பட்டோர் குடிப்பழக்கமும் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

புகை உயிருக்குப் பகை என்று எத்தனையோ முறை எச்சரிக்கை விடுத்தாலும் ஸ்டைலாக சிகரெட் பிடித்து புகையை உள்ளே இழுத்து வட்ட வட்டமாய் வளையம் விடும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எத்தனையோ முகேஷ்களும், சுரேஷ்களும் புகைப்பதற்கு எதிராக விழிப்புணர்வு விளம்பரம் செய்தாலும் நான் புகைப்பேன் என்று புகையோடு மல்லுக்கட்டும் ஆண்களும், பெண்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

நீ நிறுத்து நான் நிறுத்துறேன் என்று லட்சுமிமேனன்களும், திவ்யதர்ஷினிகளும் போட்டிபோட்டுக்கொண்டு புகை பழக்கத்திற்கு எதிராக திரள்கின்றனர் ஆனாலும் புகையை இழுத்து தள்ளுகின்றனர்.

புகை மட்டுமல்ல மது, கஞ்சா, ஹெராயின் என போதை பழக்கத்திற்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

‘அடிமை பழக்கவழக்கங்கள் மீதான சர்வதேச புள்ளிவிவரம்: 2014 நிலை அறிக்கை' என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இணை பேராசிரியர் லிண்டா கோவிங் தலைமையில் சர்வதேச ஆய்வு நடத்தப்பட்டது.

100 கோடி ‘தம்’ பிரியர்கள்

100 கோடி ‘தம்’ பிரியர்கள்

இந்த ஆய்வில் உலகில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் அதாவது 100 கோடி புகை பேர் பிடிப்பது தெரியவந்துள்ளது.

மொடாக்குடியர்கள்

மொடாக்குடியர்கள்

உலக அளவில் சுமார் 5 சதவீதம் பேர் (24 கோடி) மது அருந்துகின்றனர்.கிழக்கு ஐரோப்பியர்கள்தான் மொடாக்குடியர்களாம். மக்கள் தொகையில் நாள் ஒன்றுக்கு 13.6 லிட்டர் மதுவை ஒரு ஆள் குடிப்பாராம். வடக்கு ஐரோப்பாவில் கொஞ்சம் கம்மி 11.5 லிட்டர் மது குடிப்பார்களாம்.

ஆசியாவில் எப்படி?

ஆசியாவில் எப்படி?

மத்திய, தெற்கு, மேற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள்தான் குறைவான மதுவை குடிப்பவர்களாம். இவர்கள் குடிப்பது 2.1 லிட்டர் மதுமட்டுமே.

சிகரெட் புகைப்பழக்கம்

சிகரெட் புகைப்பழக்கம்

அதேபோல கிழக்கு ஐரோப்பியர்கள்தான் புகைப்பழக்கத்திற்கு அதிகம் அடிமையாகியுள்ளனர். அதாவது 30 சதவிகித இளைஞர்கள் புகைக்கு அடிமையாக இருக்கிறார்களாம்.

மத்தவங்க எப்படி?

மத்தவங்க எப்படி?

மேற்கு ஐரோப்பியர்கள் 28.5 சதவிகிதம் பேரும், ஆப்ரிக்காவில் 14 சதவிகிதம் பேரும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைக்கு அடிமையானவர்கள்

போதைக்கு அடிமையானவர்கள்

இதுபோல ஹெராயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் பற்றிய துல்லியமான புள்ளிவிவரம் சேகரிப்பது கடினம். ஆனால், உலகம் முழுவதும் போதை ஊசி போட்டுக் கொள்பவர்கள் 1.5 கோடி பேர் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

போதை ஊசி பழக்கம்

போதை ஊசி பழக்கம்

அதேபோல வடக்கு, மத்திய அமெரிக்கா, கரீபியன் நாட்டைச் சேர்ந்த இளசுகளில் 0.8 சதவிகிதம் பேர் போதை ஊசி பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஐரோப்பாவில் 0.3 சதவிகிதம் பேர் போதை ஊசி பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்களாம்.

சொல்ல சொல்ல கேட்காம என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? என்கிறார் இந்த ஆய்வாளர்.

English summary
Almost five per cent of the world’s adult population (240 million people) have an alcohol use disorder and more than 20 per cent (one billion people) smoke tobacco, new research on global addictive disorders has found.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X