For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசியலில் மோடியுடன் சேர்ந்தே வளரும் அமிதா ஷா பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: பாஜகவின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அமித் ஷா ஒரு பிளாஸ்டிக் வியாபாரியாக இருந்து ஆளுங்கட்சியின் தலைவராக உயர்ந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான அமித் ஷா பாஜகவின் புதிய தலைவராக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 இடங்களில் 71 இடங்களில் வெற்ற பெற அம்மாநில பாஜக தலைவரான அமித் ஷா தான் காரணம்.

இந்நிலையில் புதிய பாஜக தலைவர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.

மும்பை

மும்பை

அமித் ஷா பிவிசி பைப் வியாபாரம் செய்து வந்த அனில்சந்திர ஷாவின் மகனாக மும்பையில் பிறந்தார். அவர் தந்தை வழியில் பிளாஸ்டிக் மற்றும் பிரிண்டிங் வியாபாரம் செய்து வந்தார்.

ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ்.

அமித் ஷா சிறு வயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். அமை்பில் இருந்தார். அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கல்லூரியில் படிக்கையில் ஆர்.எஸ்.எஸ். கரசேவகர் ஆனார்.

மோடி

மோடி

1982ம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். வட்டாரம் மூலமாக அவர் முதல்முறையாக நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது மோடி அகமதாபாத்தின் ஆர்.எஸ்.எஸ். இளைஞர் அணி பொறுப்பாளராக இருந்தார்.

பயோ கெமிஸ்ட்ரி

பயோ கெமிஸ்ட்ரி

அமித் ஷா பி.எஸ்.சி. பயோ கெமிஸ்ட்ரி படித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருந்த அவர் பாஜக இளைஞர் அணி தலைவராகவும் இருந்துள்ளார்.

உள்துறை அமைச்சர்

உள்துறை அமைச்சர்

மோடி குஜராத் முதல்வராக இருக்கையில் அமித் ஷாவுக்கு உள்துறை அமைச்சர் பதவியை அளித்து அழகு பார்த்தார். அரசியலில் மோடி வளர வளர அவருடன் சேர்ந்தே வளர்ந்தார் வளர்கிறார் அமித் ஷா.

போலி என்கவுன்ட்டர்

போலி என்கவுன்ட்டர்

சொராபுத்தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாகக் கூறி குஜராத் தீவிரவாத தடுப்பு போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்த போலி என்கவுன்ட்டர் வழக்கில் அமித் ஷா கடந்த 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தனது உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

துளசிராம்

துளசிராம்

சொராபுத்தீன் என்கவுன்ட்டர் வழக்கில் முக்கிய சாட்சியமான துளசிராம் பிரஜபதி 2006ம் ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டதிலும் அமித் ஷா மீது குற்றம்சாட்டப்பட்டது.

தலைமறைவு

தலைமறைவு

சொராபுத்தீன் வழக்கில் சிக்கும் முன்பு குஜராத்தில் அதிகாரம் செய்து வந்த அமித் ஷா அதன் பிறகு பல ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.

செஸ்

செஸ்

குஜராத் மாநில சதுரங்க சங்கத்தின் தலைவராக உள்ளவர் அமித் ஷா. ஆரம்ப காலத்தில் இருந்தே அமித் ஷாவுக்கும், மோடிக்கும் இடையே நல்ல புரிதல் உண்டு.

English summary
Above are the things you need to know about Amit Shah, the new president of the ruling BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X