For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் 4-வது நாளாக 3 இடங்களில் பறந்த பாக் பயங்கரவாதிகளின் டிரோன்கள்- பாதுகாப்பு படை உஷார்

Google Oneindia Tamil News

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று 4-வது நாளாக 3 இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டிரோன்களை பறக்கவிட்டதால் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

Recommended Video

    IAF மீது China-வின் Pizza Delivery Drones-களை ஏவியதா Pak? | Oneindia Tamil

    ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் புதிய யுக்தியாக டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளன. ஜம்மு விமான படை தளம் மீது 2 டிரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

    Three Drones spotted again near Jammu military camps

    இந்த தாக்குதலில் 2 விமானப் படை வீரர்கள் லேசாக காயமடைந்தனர். இருப்பினும் மிகப் பெரிய தாக்குதல் சதிக்கான ஒத்திகை இது என்றே கருதப்படுகிறது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி தற்போது விசாரித்து வருகிறது.

    சீனாவில் பீட்சா, மருந்துகள் விநியோகத்துக்காக பயன்படுத்தப்படும் டிரோன்களையே பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய பாதுகாப்பு நிலைகள் மீதான தாக்குதல்களுக்கும் பயன்படுத்துவது தெரியவந்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து டிரோன்களை எல்லைகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பறக்கவிட்டு வருகின்றனர்.

    இன்று 4-வது நாளாக ஜம்முவில், அடுத்தடுத்து 3 இடங்களில் டிரோன்கள் பறந்தன. இன்று அதிகாலை 4.40 முதல் 4.52 மணி வரை இந்த 3 டிரோன்கள் பறக்கவிடப்பட்டன. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் முழு அளவில் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    English summary
    Three Drones spotted again near Jammu military camps today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X