For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டை உறைய வைத்த மாவோயிஸ்டுகளின் 20 ஆண்டுகால மிகப் பெரிய நாசகார தாக்குதல்கள்!

Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளான மோதலில் 19 ராணுவ வீரர்களை வீரமரணம் அடைந்திருப்பது நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதல்களில் மொத்தம் 2588 பாதுகாப்பு படையினரும் 3849 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா, ஒடிஷா, சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களின் வனப்பகுதிகள் மாவோயிஸ்டுகள் பிடியில் இருக்கின்றன. மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவதற்கான நமது பாதுகாப்பு படையினர் அடர்வனப்பகுதியில் முகாமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Timeline of major Maoists Attacks since 2003

வனப்பகுதிகளில் பழங்குடிகளை கேடயமாக வைத்துக் கொண்டு மாவோயிஸ்டுகள் இயங்குகின்றனர். மாவோயிஸ்டுகள் நமது பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து கொடூர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆனால் தீரத்துடன் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடருகின்றன. மாவோயிஸ்டுகளின் சில முக்கியமான தாக்குதல் நடவடிக்கைகளை பார்க்கலாம்.

2003-ம் ஆண்டு ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது திருப்பதி அருகே கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படுகாயங்களுடன் சந்திரபாபு நாயுடு உயிர் தப்பினார். திருமலை அடிவாரத்தில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் இந்த தாக்குதலை நடத்தினர்.

2004-ம் ஆண்டு ஒடிஷாவின் கோராபுட் நகரம் மீது 1,000க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஒரே நேரத்தில் திரண்டு தாக்குதல் நடத்தினர். 200 நவீன துப்பாக்கிகள் உட்பட ரூ50 கோடி மதிப்பிலான ஆயுதங்களையும் மாவோயிஸ்டுகள் கொள்ளையடித்துச் சென்றனர். மாவட்ட ஆயுத களஞ்சியம், 5 காவல்நிலையங்கள், கோராபுட் சிறைசாலை, எஸ்.பி. அலுவலகம் ஆகியவற்றை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

2005-ம் ஆன்டு பீகாரின் ஜெகன்னாபாத் சிறையை தகர்த்தனர் மாவோயிஸ்டுகள். மொத்தம் 7 மணிநேரம் ஜெகன்னாபாத் சிறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாவோயிஸ்டுகள் 375 கைதிகளை விடுவித்தனர். 185 ரைபிள்கள், 2000 தோட்டாக்களையும் கொள்ளையடித்துச் சென்றனர் மாவோயிஸ்டுகள்.

2006-ம் ஆண்டு ஒடிஷாவின் கஜபதி மாவட்டத்தில் ஆயுதப் படையினர் முகாம் மீது 500க்கும் அதிகமான மாவோயிஸ்டுகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினர். 40 கைதிகளை விடுவித்து ஆயுதங்களை கொள்ளையடித்தனர். இதில் 3 போலீசார் கொல்லப்பட்டனர்.

2006-ம் ஆண்டு சத்தீஸ்கரின் தண்டேவடா மாவட்டத்தில் 800 மாவோயிஸ்டுகள் ஒருங்கிணைந்து நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் படுகாயமடைந்தனர். 20 பேரை கடத்திச் சென்றனர்.

2007-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் எம்.பி.யாக இருந்த சுனில்குமார் மகாதோவை சுட்டுப் படுகொலை செய்தனர் மாவோயிஸ்டுகள். கால்பந்து போட்டியை பார்த்து கொண்டிருந்த போது மாவோயிஸ்டுகள் இந்த தாக்குதலை நடத்தினர்.

2007-ம் ஆண்டு சத்தீஸ்கரின் தண்டேவடா சிறை மீது தாக்குதல் நடத்தினர் மாவோயிஸ்டுகள். 100 மாவோயிஸ்டுகள் உட்பட 303 சிறை கைதிகளை விடுவித்தனர் மாவோயிஸ்டுகள்.

2007-ம் ஆண்டு ஜார்க்கன்ட் மாநிலத்தின் கிரித் மாவட்டத்தில் முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் அனுப் உட்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அப்பகுதியில் நடைபெற்ற கலாசார நிகழ்ச்சி மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி இந்த தாக்குதலை மேற்கொண்டனர் மாவோயிஸ்டுகள்.

2007-ம் ஆண்டு ஒடிஷாவில் நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் ஒன்று திரண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 14 போலீசார் கொல்லப்பட்டனர்.

2008-ம் ஆண்டு ஒடிஷாவில் போலீசார் சென்ற படகுகள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். பாலிமேலா அணைக்கட்டு பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 38 பாதுகாப்பு படையினர் பலியாகினர்.

2008-ம் ஆண்டு ஒடிஷாவின் மல்காங்கிரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 21 போலீசார் கொல்லப்பட்டனர். ஒடிஷாவின் கோராபுட் மாவட்டத்தில் 2009-ல் மேலும் 10 போலீசார கொன்றனர் மாவோயிஸ்டுகள்.

2009-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் 300 பயணிகளுடன் ரயில் ஒன்றை கடத்தி சிறை பிடித்தனர் மாவோயிஸ்டுகள். சில மணிநேரம் கழித்து இந்த ரயிலை விடுவித்தனர் மாவோயிஸ்டுகள். 2009-ல் மகாராஷ்டிராவின் கட்ச்ரோலியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 16 போலீசார் கொல்லப்பட்டனர். 2009-ல் ஜார்க்கண்ட்டில் 9 போலீசாரை கொன்றனர் மாவோயிஸ்டுகள்.

2010-ம் ஆண்டு மேற்கு வங்கத்தின் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். அதே 2010-ம் ஆண்டு சத்தீஸ்கரின் தண்டேவடா வனப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்லில் 75 பாதுகாப்பு படையினர் படுகொலை செய்யப்பட்டனர்.

2012-ல் பீகாரின் கயா மாவட்டத்தில் 6 பாதுகாப்பு படையினரை கொன்றனர் மாவோயிஸ்டுகள். 2013-ல் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 25 பேரை படுகொலை செய்தனர்.

2014-ல் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் 14 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். 2017-ம் சுக்மா மாவட்டத்தில் 12 சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி சுக்மா மாவட்டத்தில் மேலும் 24 படையினரை படுகொலை செய்தனர் மாவோயிஸ்டுகள்.

English summary
Here is a Timeline of major Maoists Attacks since 2003.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X