For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே நேரத்தில் 3 முக்கிய செயற்கைகோள்கள்.. இன்று விண்ணில் ஏவும் இஸ்ரோ.. என்ன சிறப்பு?

Google Oneindia Tamil News

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ இன்று (பிப்.,14) காலை 5.59 மணிக்கு பிஎஸ்எல்பி சி 52 எனும் ராக்கெட் மூலம் இஓஎஸ் 04 உள்பட 3 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த உள்ளது. இதை பொதுமக்கள் பார்த்து ரசிக்க இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. 50 வாக்குறுதிகள் உடன் பாமக தேரத்ல் அறிக்கை வெளியீடு!நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. 50 வாக்குறுதிகள் உடன் பாமக தேரத்ல் அறிக்கை வெளியீடு!

இதற்காக EOS 04 (இஓஎஸ் 04) என்ற செயற்கைக்கோள் 1,780 கிலோ எடையுடன் வடிவமைக்கப்பட்டது. இந்த செயற்கைகோளுடன் 2 சிறு செயற்கைகோள்களும் பிப். 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

கவுண்டடவுன் துவக்கம்

கவுண்டடவுன் துவக்கம்

இந்த செயற்கைகோள்கள் PSLV C52 எனும் (பிஎஸ்எல்வி சி52) ராக்கெட் மூலம் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 25 மணி 30 நிமிடம் கவுண்ட்டவுன் துவங்கியது. திங்கள்கிழமை காலை 5:59 மணிக்கு பிஎஸ்எல்வி சி52 ராக்கெட் 3 செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது.

பயன் என்ன

பயன் என்ன

இந்த EOS 04 செயற்கைகோளானது ரேடார் மூலம் படம் பிடிக்கும் வசதி கொண்டது. இதன்மூலம் வானிலை மாற்றங்களை அறிய முடியும். விவசாயம், சுற்றுச்சூழல், வனம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த கண்காணிப்புக்கு உதவியாக இருக்கும். மாணவர் செயற்கைகோளான இன்ஸ்பைர்சாட்-1 இந்திய விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐஎஸ்டி) பவுல்டரில் உள்ள கோலாரடோ பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் ஆய்வகம் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

லைவ் வீடியோ

லைவ் வீடியோ

மற்றொன்று இஸ்ரோவின் தொழில்நுட்ப விளக்க முன்னோடி செயற்கைக்கோள் (INS-2TD) ஆகும். இதில் வெப்பம் தாங்கி படமெடுக்கும் கேமரா உள்ளது. இதன்மூலம் பூமியின் வெப்ப மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும்.இந்த 3 செயற்கைகோள்களுடன் ராக்கெட் விண்ணில் பாய்வதை பொதுமக்கள் பார்க்க இஸ்ரோ அதன் யூடிப் சேனலில் (ISRO Official)லைவ் செய்ய உள்ளது.

லைவ் வீடியோ

லைவ் வீடியோ


இதற்கான லைவ் வீடியோ நாளை (பிப்.14) காலை5:30 மணி முதல் ஒளிபரப்பப்பட உள்ளது. 2022ல் இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோவின் முதல் விண்வெளி திட்டம் இதுவாகும். அதுபோல் சிவனுக்கு பிறகு இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள சோமநாத்துக்கும் இது முதல் திட்டமாகும். இதனால் இது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
ISRO is scheduled to launch three satellites tomorrow(Feb 14) at 5.59 am, in the space vechile PSLv C52 rocket. ISRO arranged for the live its youtube channal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X