மீன்பிடி படகில் சரக்கு கப்பல் மோதல்.. 2 பேர் பலி.. கேரளாவில் சோகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: கேரளாவில் மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில், 2 மீனவர்கள் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர்.

அங்குள்ள கொச்சி துறைமுகத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இங்கு வந்த பனாமா நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று, துறைமுகத்தில் இருந்து வெளியேறும்போது, எதிர்பாராதவிதமாக, அங்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த படகு மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

Two fishermen killed, 11 injured as a Panama registered cargo ship hits fishing boat in Kerala

இதில், மீனவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர். சம்பவத்திற்குக் காரணமான, அந்த சரக்கு கப்பல் உடனடியாக மாயமாகிவிட்டது. அதனை இந்திய கடலோர படையினர் உதவியுடன் கேரள போலீசார் தேடி, பறிமுதல் செய்துள்ளனர்.

சரக்குக் கப்பலின் கேப்டன், ஊழியர்கள் அனைவரையும் போலீசார் தங்களது பிடிக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் கொச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மொத்தம் 14 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும், அவர்களில் ஒருவரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது.

இது கேரள கடல்பரப்பில் நடைபெறும் 2வது மோதல் சம்பவமாகும். ஏற்கனவே, 2012ம் ஆண்டு இத்தாலி கடற்படையினர், கேரள மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்றதும் குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Two Indian fishermen were killed and 11 others injured when a Panama registered cargo ship hit their fishing boat early on Sunday off Kochi coast, police said.
Please Wait while comments are loading...