For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூபாய் நோட்டு பற்றி பீதி தேவையில்லை.. இப்போ மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: நவம்பர் 8ம் தேதி செவ்வாய்க்கிழமை, நள்ளிரவு 12 மணி முதல், ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்துள்ளார்.

கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை அவசியப்படுவதாகவும், சிரமத்தை பொறுத்துக் கொண்டு, மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், மோடி செவ்வாய்க்கிழமை இரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இப்போது செய்ய வேண்டியது என்ன என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும். குழப்பமோ, பதற்றமோ, பீதியோ படாமல் இதை படித்து பாருங்கள் போதும்.

What one should do to exchange 500 and 1000 rupees notes

*நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியோடு ரூ.500 மற்றும் ரூ.1000 முகமதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் செல்லாது.

*ஏடிஎம், அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகள் புதன்கிழமையான இன்று திறந்திருக்காது. எனவே நாளை, வியாழக்கிழமை நோட்டுக்களை மாற்றிக்கொள்ள முடியாது

*10ம் தேதி பல பகுதிகளில் ஏடிஎம் திறந்திருக்கும். சில பகுதிகளில் திறக்காது. வங்கிகள் திறக்கப்படும். எனவே அன்று ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம்.

*ஒருவரிடம், ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் மட்டுமே இருந்தால், நோட்டுகளை மாற்றிக்கொள்ளும்வரை, அவர்கள் டிடி, செக், டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.

*ஏழை, எளியவர்களிடம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இருப்பது சாத்தியமில்லை என்பதால், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் வரும் 11ம் தேதி நள்ளிரவு வரை ரூ.500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் செல்லும்.

*வரும் டிசம்பர் 30ம் தேதிவரை, இந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் கொடுத்து, புதிய வகை ரூ.500 அல்லது ரூ.2000 ரூபாய் நோட்டுக்களாக அவற்றை மாற்றிக்கொள்ள அவகாசம் தரப்பட்டுள்ளது. சில காரணங்களால், அதற்குள் மாற்ற முடியவில்லை என்றால், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை அவகாசம் உள்ளது. ஐடி ஃப்ரூப் காண்பித்து ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம்.

English summary
What one should do to exchange 500 and 1000 rupees notes as Modi announces they are no longer legal tender.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X