For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்டாசு கடை நடத்திய அரசியல்வாதி! தேடி வந்த முதல்வர் பதவி! கெட்டியாக பிடித்து கொள்ளும் பூபேந்தர படேல்

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத்தில் பாஜக மிகப் பெரியளவில் வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், பூபேந்திர படேல் இரண்டாவது முறையாகக் குஜராத் முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.

குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதனிடையே வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒரு பக்கம் இமாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றியைத் தவறவிட்டுள்ளது. அதேநேரம் மறுபுறம் குஜராத்தில் இதுவரை எந்தவொரு கட்சியும் பெரிதாகப் பிரம்மாண்ட வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது.

தட்டி தூக்கிய காங்கிரஸ்.. மடமடவென சரிந்த பாஜக செல்வாக்கு.. இமாச்சல் தோல்விக்கு 5 முக்கிய காரணங்கள்தட்டி தூக்கிய காங்கிரஸ்.. மடமடவென சரிந்த பாஜக செல்வாக்கு.. இமாச்சல் தோல்விக்கு 5 முக்கிய காரணங்கள்

குஜராத்

குஜராத்

இப்போது வரை பாஜக சுமார் 156 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதே நிலை தொடரும்பட்சத்தில் மொத்தம் 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில், பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்யும். மேலும், இப்போது முதல்வராக உள்ள பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்க உள்ளார். இந்தத் தேர்தலுக்குப் பின் குஜராத் முதல்வர் மாற்றப்படலாம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், இவ்வளவு பெரிய வெற்றியை பாஜக பெற்றுள்ள நிலையில், இந்த நேரத்தில் முதல்வரை மாற்றும் வாய்ப்புகள் ரொம்பவே குறைவு.

பூபேந்திர படேல்

பூபேந்திர படேல்

இந்தத் தேர்தலில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் சுமார் 1.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜூலை 1962இல் பிறந்தவர் பூபேந்திர படேல்... சிறு வயதிலேயே இவர் தன்னை ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து கொண்டார். தொடர்ந்து பல ஆண்டுகள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்த இவர், நகராட்சி கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 3 முறை அகமதாபாத் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட இவர், 2015 முதல் 2017 வரை அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்

கடந்தாண்டு குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானி ராஜினாமா செய்திருந்தார். கட்டுமான தொழிலதிபரான பூபேந்திர படேல் கடந்த 2021 செப். மாதம் குஜராத் முதல்வராக நியமிக்கப்பட்டார், குஜராத் மக்களுக்கு மாநில அரசு மீது அதிருப்தி இருந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த அமைச்சரவையும் மாற்றியமைக்கப்பட்டது. அப்போது தான் பூபேந்திர படேல் முதல்வராக நியமிக்கப்பட்டார். அப்போது பூபேந்திர படேலை அமைதியான அதேநேரம் மிகவும் உறுதியான தலைவர் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

பட்டாசு கடை

பட்டாசு கடை

சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படித்துள்ள பூபேந்திர படேல், சிறு வயதில் பேரசிரியாக இருந்த தனது தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். பின்னர் இளமைக் காலத்தில் கொஞ்சக் காலம் அப்பகுதியில் பட்டாசுக் கடைகளையும் வைத்து நடத்தியுள்ளார். கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படித்த பூபேந்திர படேல் முதல் மூன்று ஆண்டுகள் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். அதன் பின்னர், சொந்தமாகக் கட்டுமான நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். இப்போது இந்த நிறுவனத்தை அவரது மகனும் மருமகனும் கவனித்து வருகின்றனர்.

இக்கட்டான சூழல்

இக்கட்டான சூழல்

பூபேந்திர படேல் மிகவும் இக்கட்டான சூழலில் முதல்வராகப் பதவியேற்றார். அவர் முதல்வராகப் பதவியேற்ற சமயத்தில் ராஜ்கோட் மற்றும் ஜாம்நகர் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனால் பதவியேற்பதற்கு முன்பே, பூபேந்திர படேல் விமானம் மூலம் ஜாம்நகரில் வெள்ளப்பாதிப்பு பணிகளை ஆய்வு செய்தார். அவர் எதிர்கொண்ட சிக்கல் அத்துடன் முடியவில்லை. சில மூத்த தலைவர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கியதால் பதவியேற்பு விழாவும் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது.

பிரச்சினைகள்

பிரச்சினைகள்

முதல்வர் பதவியில் இவர் ஓராண்டு நீடித்த நிலையில், அப்போதும் சில பிரச்சினகைல் தொடர்ந்தது. அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பழைய ஓய்வூதிய முறையை வலியுறுத்தினர். அதேபோல அரசு வேலை தேர்வுத்தாள் இணையத்தில் லீக்கானது. அங்குள்ள 33 மாவட்டங்களில் 26இல் கால்நடைகள் மத்தியில் பரவும் மோசமான தோல் நோய் பரவியது. அங்குள்ள முத்ரா துறைமுகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 21 ஆயிரம் கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. மேலும், பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையானது.

வெற்றி

வெற்றி

அகமதாபாத் முன்னாள் மேயர் மீனாக்சிபென் குஜராத் முதல்வர் குறித்துக் கூறுகையில், "நாங்கள் இருவரும் இணைந்து 1990களில் ஒன்றாகவே பணியாற்றியுள்ளோம். அவர் நகராட்சியில் எப்படி பணியாற்றினாரோ அதேபோலத் தான் இப்போதும் வேலை செய்கிறார். அவர் எப்போதும் உள்ளூர் கட்சி அலுவலகத்துக்குச் சென்று மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பார். இது அவரை மிகவும் பிரபலமாக்கியது. இப்போதும் அவர் தொண்டர்களிடம் பொதுமக்களிவெற்றி

அகமதாபாத் முன்னாள் மேயர் மீனாக்சிபென் குஜராத் முதல்வர் குறித்துக் கூறுகையில், "நாங்கள் இருவரும் இணைந்து 1990களில் ஒன்றாகவே பணியாற்றியுள்ளோம். அவர் நகராட்சியில் எப்படி பணியாற்றினாரோ அதேபோலத் தான் இப்போதும் வேலை செய்கிறார். அவர் எப்போதும் உள்ளூர் கட்சி அலுவலகத்துக்குச் சென்று மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பார். இது அவரை மிகவும் பிரபலமாக்கியது. இப்போதும் அவர் தொண்டர்களிடம் பொதுமக்களிடமும் நேரடியாகத் தொடர்பில் உள்ளார் அதுவே அவரது வெற்றியை உறுதி செய்கிறது" என்றார்.டமும் நேரடியாகத் தொடர்பில் உள்ளார் அதுவே அவரது வெற்றியை உறுதி செய்கிறது" என்றார்.

English summary
All things to know about Gujarat Chief Minister Bhupendra Patel: BJP recored biggest victory in Gujarat election 2022.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X