அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் பதஞ்சலி பொருட்கள்... மத்திய அரசு கவனிக்காதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி : பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்கள் தரமற்றவை என்பது மீண்டும் மீண்டும் தெரியவரும் நிலையில் மத்திய அரசு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன் என்று நுகர்வோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மைதா கலப்பில்லாத பிஸ்கட், இயற்கையான பானங்கள் இருக்கும் போது பாக்கெட் பானங்கள் எதற்கு, இயற்கைக்கு உதவுங்கள்... பசுக்களை இறைச்சிக் கொட்டில்களுக்கு செல்வதை தவிருங்கள்... இருங்க இருங்க இதை நாங்க சொல்லலை பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன பொருட்களுக்கு அவரே அளிக்கும் விளக்கங்கள் இவை.

ஆனால் உண்மையில் என்ன நிலவரம் தெரியுமா பதஞ்சலியின் 6 பொருட்களை விற்பனையில் இருந்து திரும்பப் பெறுமாறு நேபாளம் அறிவித்துள்ளது.

தரமற்ற பொருட்கள்

தரமற்ற பொருட்கள்

பதஞ்சலியின் ஆம்லா சூரணம், திவ்ய கஸ்ஹர் சூரணம், திரிபலா சூரணம், அஷ்வகந்தா உள்ளிட்ட 6 மருத்துவ பொருட்களை தரமற்றவை என்பதால் அவற்றை திரும்பப் பெற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தர பரிசோதனையில் தோல்வி

தர பரிசோதனையில் தோல்வி

ஏற்கனவே உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆர்டிஐ மூலம் பெற்ற தகவலில் பதஞ்சலியின் 40 சதவீத பொருட்கள் இதில், பதஞ்சலி நிறுவனத்தின் 40 சதவீதம் பொருட்கள் முழுமையான ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்றும், பொருட்களின் தரம் குறைவாக இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

ராணுவ கேன்டீன்களில் விற்பனை ரத்து

ராணுவ கேன்டீன்களில் விற்பனை ரத்து

பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் மற்றும் ஷிவிங்கி பீஜ் ஆகிய பொருட்கள் தரமற்றவை எனவும், இதில் 31.68 சதவீதம் அந்நிய நாட்டு மூலப்பொருட்கள் கலந்திருப்பதும் ஆய்வில் தெரியவந்தது. கடந்த ஏப்ரல் மாதம் பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் குறித்து எழுந்த சர்ச்சையால் ராணுவ கேன்டீன்களில் அவற்றை விற்க தடை விதிக்கப்பட்டது.

தொடர் சர்ச்சை

தொடர் சர்ச்சை

அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி ஒவ்வொரு மாநில பரிசோதனையிலும் பதஞ்சலியின் சில பொருட்கள் தர பரிசோதனையில் தோல்வியடைந்து வருகின்றன. இந்த செய்திகள் ஒவ்வொரு முறையும் செய்தி ஊடகங்களில் வந்த வண்ணம் இருந்த போதும் பதஞ்சலி குறித்த விளம்பரங்களும் நின்றபாடில்லை.

நடவடிக்கை இல்லாதது ஏன்?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Babaramdev's Patanjali products are failing quality test in north states but centre is not taking any steps against in this why?
Please Wait while comments are loading...