For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி அலையை வைத்து டெல்லி சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற பார்க்கும் பாஜக

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் குறித்து திங்கட்கிழமை பார்த்தோம். டெல்லி சட்டசபை தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது என்றாலும் ஆம் ஆத்மி கட்சியின் நாடகத்திற்கு பிறகு நடப்பதால் இத்தேர்தல் சுவாரஸ்யமானது.

தேர்தல் குறித்து ஆய்வு செய்யும் டாக்டர் சந்தீப் சாஸ்திரி ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் பற்றிய தனது கருத்துக்களை ஒன் இந்தியாவிடம் 2 பாகங்களாக தெரிவித்தார். அவர் இறுதி பாகத்தில் டெல்லி தேர்தல் களம் பற்றி பேசியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி

ஆம் ஆத்மி கட்சி

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை. அவசர கோலத்தில் ராஜினாமா செய்தது மோசமான முடிவாகும். ராஜினாமா செய்தது மோசமான முடிவு என்று அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட அக்கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் தற்போது உணர்ந்துள்ளனர். அவர்களின் மோசமான முடிவு மற்றும் செயல்பாடுகளுக்கான விளைவுகளை லோக்சபா தேர்தலில் சந்தித்துள்ளதை அவர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் அவர்கள் தற்போது உணர்ந்துள்ளது அவர்களின் நிலைமையை மாற்றுமா என்று தெரியவில்லை.

பிரதமர்

பிரதமர்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பாஜக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யும். பிற மாநிலங்களை போன்றே டெல்லியிலும் பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அவர்கள் மோடியின் பெயரால் தேர்தலை சந்திப்பார்கள். மோடி அலை பாஜகவுக்கு பயனுள்ளதாக உள்ளது. டெல்லியிலும் மோடி அலை வேலை செய்யும் என்றே தெரிகிறது.

சுவாரஸ்யமான பரிமாணம்

சுவாரஸ்யமான பரிமாணம்

டெல்லி தேர்தலில் ஒரு சுவாரஸ்யமான பரிமாணம் உள்ளதை பார்க்க முடிகிறது. பிற மாநிலங்களை போல் இல்லாமல் டெல்லியில் கெஜ்ரிவால் காரணி உள்ளது. அது பாஜக தலைமைக்கு சவால் விடக்கூடும். இது சுவாரஸ்யமான சவால். அதனால் டெல்லி தேர்தல் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும்.

உண்மை கதை

உண்மை கதை

டெல்லி தேர்தலில் காங்கிரஸ் காணாமல் போகும் என்பதே உண்மை கதை. காங்கிரஸை ஆதரிப்போர் இம்முறை ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று தெரிகிறது.
காங்கிரஸின் வாக்கு வங்கியை பயன்படுத்த ஆம் ஆத்மி கட்சி முயற்சி செய்யும். அண்மையில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி மட்டும் அடையவில்லை, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜகவுக்கு இடையே தான் போட்டி இருக்கும். பாஜகவுக்கு சாதகமாக களம் இருந்தாலும் இது சுவாரஸ்யமான போட்டி ஆகும். தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும் அது ஆம் ஆத்மி என்ற வலுவான எதிர்கட்சியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

English summary
Yesterday we dealt with the elections in Jharkhand and Jammu and Kashmir. While the Delhi elections is still sometime away, it is still a very interesting election especially after all the drama that the Aam Admi Party created.Dr Sandeep Shastri a leading psephologist had given oneindia.com his insights on the elections in Jharkhand and Jammu and Kashmir. In the concluding part of this series, Dr Shastri discusses the battle for Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X