Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித்ஷாவுக்கு வந்த ஆவேசம்.. "அவரை" விட்டுடாதீங்க.. நல்லா கேளுங்க.. திகைத்து போன அயோத்தி..!

அகிலேஷ் யாதவ் மீது சரமாரி விமர்சனம் வைத்துள்ளார் அமித்ஷா

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: "அகிலேஷ் யாதவ் இங்கே வந்தால், அவரை விட்டுவிடாதீர்கள்.... கேள்வி கேளுங்கள்" என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சு மிகப்பெரிய பரபரப்பை தேசிய அரசியலில் ஏற்படுத்தி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது.. இப்போதுள்ள ஆட்சியையே தக்க வைத்து கொள்ள பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

மற்றொருபுறம், முன்னாள் முதல்வர்கள் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி உட்பட, காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா போன்றோர் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரங்களை தொடங்கி விட்டனர்.

 கூட்டணி

கூட்டணி

இந்த முறை காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட போகிறது.. அகிலேஷ் யாதவ் தலைமையில் கூட்டணி அமையும் என தெரிகிறது.. அதேபோல மாயாவதியுடன் சில கட்சிகள் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது.. இந்த கட்சிகளில் பாஜகவுக்கு சவால்விடும் வகையில் காங்கிரசும், சமாஜ்வாதி கட்சியும் முன்னணியில் இருந்து செயல்பட்டு வருகின்றன. பிரியங்கா காந்தி ஒருவருடமாகவே உபியில் முகாமிட்டு, தன்னுடைய வியூகங்களை செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்.

 காரசாரம்

காரசாரம்

அதுபோலவே, செல்லுமிடமெல்லாம் பாஜகவின் குறைகளை, அதிருப்திகளை சுட்டிக்காட்டி, காரசாரமாக விமர்சித்து கொண்டிருக்கிறார் அகிலேஷ்.. வரும் தேர்தலில் யாதவர்களை தவிர்த்து, தலித்துகளுக்கான முக்கியத்துவத்தையும் அதிகரிக்க திட்டமிட்டு வருகிறார்... இது பாஜகவுக்கு ஒரு ஜெர்க்கை தந்து வருகிறது.. காரணம், இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய மாநிலமாக உபி திகழ்ந்து வரும் நிலையில், 403 தொகுதிகளை கொண்ட இம்மாநிலத்தின் தேர்தலின் வெற்றிதான், தேசிய அரசியலின் வெற்றியாக மதிப்பிடப்பட்டு வருகிறது..

 யாத்திரை

யாத்திரை

இதற்காகவே பாஜக பல்வேறு நலத்திட்டபணிகளை அறிவித்தும் வருகிறது. அந்த வகையில், இப்போதும் அகிலேஷ் மீது பாஜக பாய்ந்துள்ளது.. அயோத்தியில் பாஜக சார்பில் மக்கள் நம்பிக்கை யாத்திரை என்ற பெயரில் கூட்டம் நடந்தது... இதில் கலந்து கொண்டு அமித்ஷா பேசியதாவது: "சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கட்சி அரசுகள், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை தடுத்து நிறுத்திய கட்சிகள் ஆகும்... அயோத்தியில் கர சேவகர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்...

 உடல்கள்

உடல்கள்

அவர்களது உடல்களை சரயு நதியில் வீசினார்கள்.. கர சேவகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது ஏன்? என்பதை நீங்கள் அகிலேஷ் யாதவிடம்தான் கேட்க வேண்டும்.. நம்பிக்கைகளை மதிக்காத அரசுகள்தான் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி அரசுகள். ஆனால், இன்று பிரதமர் மோடியும், உபி முதல்வர் யோகியும் மக்களின் ஒவ்வொரு நம்பிக்கையையும் மதித்து நடந்து கொள்கிறார்கள்.. அகிலேஷ் யாதவ் இங்கே வந்தால் அவரை விட்டுவிடாதீர்கள்.... கேள்வி கேளுங்கள்....

ஆட்சேபனை

ஆட்சேபனை

கர சேவகர்கள் செய்த குற்றம் என்ன? என்று அவரிடம் கேளுங்கள்... அரசு அவர்களை முதலில் சுட்டது ஏன் என்றும் கேளுங்கள்.. சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதில் என்ன ஆட்சேபனை என்று அவரையே கேளுங்கள்... அதுமட்டுமல்ல, ராமரை ஏன், ஒரு சின்னஞ்சிறிய குடிசையில் பல வருடங்களாக தங்க வைத்தீர்கள்? என்றும் கேளுங்கள்.. இன்று அயோத்தியில் ராமர் அவதரித்த அதே இடத்தில், பிரதமர் மோடி பிரமாண்டக் கோவிலை எழுப்புகிறார்... அது இன்னும் சில மாதங்களில் கட்டிமுடிக்கப்பட்டுவிடும்.. இந்த கோவிலை வர விடாமல் தடுத்தவர்கள் சமாஜ்வாடி கட்சியினரும், காங்கிரஸ்காரர்களும், பகுஜன் சமாஜ் கட்சியினரும்தான்" என்றார் அமித்ஷா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+