For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேமனை தூக்கிலிட நாக்பூர் சிறை தூக்கு மேடையை சீரமைக்க ரூ.22 லட்சம் செலவு

By Siva
Google Oneindia Tamil News

நாக்பூர்: யாகூப் மேமனை தூக்கிலிட நாக்பூர் சிறையில் உள்ள தூக்கு மேடையை சீரமைக்க மகாராஷ்டிரா மாநில அரசு ரூ.22 லட்சம் அளித்துள்ளது.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமன் நாக்பூர் மத்திய சிறையில் இன்று காலை தூக்கிலிடப்பட்டார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Yakub Memon hanging: Facts you must know

இந்நிலையில் மேமனின் தூக்கு பற்றிய சில தகவல்கள் இதோ,

  • யாகூப் மேமன் அவரின் 54வது பிறந்தநாளான இன்று தூக்கிலிடப்பட்டார்.
  • 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 100 பேரில் யாகூப் மேமனின் மரண தண்டனையை மட்டுமே உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
  • கடந்த 4 ஆண்டுகளில் தூக்கிலிடப்பட்ட 3வது தீவிரவாத குற்றவாளி யாகூப் மேமன்.
  • 1993ம் ஆண்டு மும்பையில் 13 இடங்களில் குண்டுவெடித்தது. அந்த சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் கழித்து மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • மேமனை தூக்கிலிடும் முன்பு நாக்பூர் மத்திய சிறையில் உள்ள தூக்கு மேடையை சீரமைக்க மகாராஷ்டிரா அரசு ரூ.22 லட்சம் அளித்துள்ளது.
  • கடந்த 31 ஆண்டுகளில் நாக்பூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்ட முதல் நபர் யாகூப் மேமன் தான்.
  • முன்னதாக 1984ம் ஆண்டு கொலை வழக்கில் அமராவதியைச் சேர்நத்த வாங்கடே சகோதரர்கள் நாக்பூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
  • மேமன் விவகாரத்தில் தான் உச்ச நீதிமன்றம் முதல்முறையாக அதிகாலை 3.18 மணிக்கு வழக்கை விசாரித்தது.
English summary
Maharashtra government had sanctioned Rs. 22 lakh to repair the hanging shed in Nagpur central jail before the execution of 1993 Mumbai serial blast convict Yakub Memon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X