For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலை- ஒரே மாதத்தில் 90,000 பேர் அகதிகளாக வெளியேறினர்!

By Mathi
Google Oneindia Tamil News

டாக்கா: மியான்மரில் ராணுவமும் பவுத்த பேரினவாதிகளும் இணைந்து ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது நடத்தி வரும் இனப்படுகொலை உலகை உலுக்கிய கொசாவோ, ஈழப் படுகொலைகளை விட படு கொடூரமாக இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 90,000 முஸ்லிம்கள் மியான்மரை விட்டு வெளியேறி அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக அம்மண்ணில் வாழவே முடியாத நிலைக்குத்தான் காலந்தோறும் தள்ளப்பட்டு வருகின்றனர். மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து ஜனநாயக ஆட்சியை மலரச் செய்த சூகி ஆட்சியிலும் இந்த மனித பேரவலம் தொடருகிறது.

90,000 Rohingya escape Myanmar violence

கடந்த மாத இறுதியில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ராணுவ முகாம்களைத் தாக்கிவிட்டதாக கூறி மாபெரும் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு வருகிறது. பிஞ்சு குழந்தைகள், சிறுவர்கள், தாய்மார்கள் என எவரையும் விட்டு வைக்காத ராணுவமும் பவுத்த பேரினவாதிகளையும் காக்கை குருவிகளை போல வேட்டையாடி வருகின்றனர்.

இதனால் மியான்மரை விட்டு வங்கதேசத்துக்கு அகதிகளாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் தப்பி வருவது தொடருகிறது. ஆகஸ்ட் மாதம் மட்டும் 90,000 பேர் மியான்மரை விட்டு வெளியேறி வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த முயன்ற ஐநாவுக்கும் மியான்மர் அரசு முட்டுக்கட்டை போட்டு 'மனித உரிமை போராளி' என்கிற பொய் முகத்தை தொங்கவிட்டு நிற்கிறது. வங்கதேசத்தில் அடைக்கலமாகியுள்ளவர்களுக்காக முகாம்கள் ஐநா அகதிகள் அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

English summary
Nearly 90,000 Rohingya have fled to Bangladesh since violence erupted in Myanmar in August.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X