For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீட்டா ஏன் தமிழர்களை குறி வைக்கிறது? ஆப்ரிக்காவிலிருந்து ஜல்லிக்கட்டுக்கு ஓர் ஆதரவுக் குரல்!

By Shankar
Google Oneindia Tamil News

யாவுண்டே(கேமரூன்): ஆப்ரிக்காவின் மேற்கு கரையோர கேமரூன் நாட்டிலிருந்து டேவிட் என்பவர் சமூகவலைத் தளத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

வீடியோவில் பேசியுள்ள அவர், மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் ஜல்லிக்கட்டை பீட்டா ஏன் தடை செய்யத் துடிக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

A voice for Jallikkattu from Africa

டேவிட் என்று தன்னை அறிமுகப்படுத்தும் அவர், அடுத்து அவரது சொந்த மொழியிலும் நீண்ட பெயரைக் குறிப்பிடுகிறார்.

'ஜல்லிக்கட்டை தடை கோரும் பீட்டாவுக்கு ஒரே ஒரு கேள்வி. உலகிலேயே அதிக அளவு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை,

சீனாவும் , ஃப்ரான்ஸ் அல்லது எனது நாடான கேமரூனும் இல்லை.. இந்தியாதான் உலகிலேயே அதிக அளவுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கிறது

அதிகமாக மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா என்பது பீட்டாவுக்குத் தெரியாதா? பீட்டா ஏன் அதைப் பற்றி ஏதும் கருத்து சொல்லவில்லை.

பீட்டாவே, ஏன் தமிழர்களையும் தமிழர் பண்பாட்டையும் குறி வைக்கிறீர்கள். ஜல்லிக்கட்டு மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்தது. பீட்டாவே அந்த பாரம்பரியத்தை புரிந்து கொள்கிறீர்களா?

முடிந்தால் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு முதலில் தடை கோருங்கள். மற்றதை பிறகு பார்க்கலாம். நான் ஆப்பிரிக்காவில் இருந்தாலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் எல்லோரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருப்போம்,' என்று வீடியோ மூலம் கூறியுள்ளார்

தீமையிலும் ஒரு நன்மை என்பார்களே. அதைப் போல், உலக அளவில் தமிழர் பாரம்பரியத்தின் பெருமைகளைப் புரிய வைப்பதற்க்கும் இந்த ஜல்லிக்கட்டு தடை உதவியாக இருக்குமோ?

English summary
David from the African country Cameroon is supporting Jallikattu. He is questioning why
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X