மனிதர்களை பார்த்து பேய் மாதிரி சிரித்த அமேசானின் அலெக்ஸா.. தொடர்ந்து குவியும் புகார்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மனிதர்களை பார்த்து சிரிக்கும் அமேசானின் அலெக்ஸா-வீடியோ

  நியூயார்க்: அமேசானின் 'அலெக்ஸா' என்ற மென்பொருள் சாதனம் மக்களை பார்த்து பேய் மாதிரி சிரிப்பது சர்ச்சை ஆகி இருக்கிறது. ரோபோக்கள் எதிர்காலத்தில் உலகை ஆளும் என்ற பயத்தை இந்த பிரச்சனை அதிகரித்து இருக்கிறது.

  2014ல் தான் அமேசான் நிறுவனம் 'அலெக்ஸா' சாதனத்தை உருவாக்க முயற்சி செய்தது. 2015 இறுதியில் இதை வைத்த டெஸ்ட் செய்தது. 2017 இறுதி வரை 50,000க்கும் அதிகமான மக்கள் உலகம் முழுக்க இதை பயன்படுத்துகிறார்கள்.

  இதுவரை இந்த சாதனத்தில் எந்த பிரச்சனையும் ஏற்பட்டது இல்லை. முதல்முறையாக இது மக்களை பயமுறுத்தி இருக்கிறது.

  'அலெக்ஸா'

  'அலெக்ஸா'

  'அலெக்ஸா' சாதனம் பார்க்க ஸ்பீக்கர் போலவே இருக்கும். ஆனால் இது நாம் சொன்னதை எல்லாம் செய்யும் குட்டி சிட்டி ரோபோட் என்று கூட சொல்லலாம். நாம் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் சர்ச் செய்து பதில் சொல்லும். அதேபோல் வீட்டில் இருக்கும் மின்னணு சாதனங்களுடன் இதை இணைத்து எல்லாவற்றையும் இயக்கலாம்.

  பல பயன்

  இதன் மூலம் வீட்டில் டிவியை இயக்கலாம், மின்விசிறி ஆன் செய்வது, காரை ஆன் செய்வது கதவை திறப்பது, பாத்ரூமில் ஹீட்டர் போடுவது, பேஸ்புக்கில் சர்ச் செய்து போஸ்ட் போடுவது என என்ன வேண்டுமானாலும் இதன் மூலம் செய்ய முடியும். கூடுதல் சாப்ட்வேர்களை அப்லோட் செய்து பிடித்த மாதிரி இதை மாற்றிக் கொள்ளலாம்.

  சிரிக்கிறது

  ஆனால் இதில் இப்போது பிரச்சனை வந்துள்ளது. மக்கள் என்ன கேட்டாலும் அவ்வப்போது இது மோசமாக சிரித்து இருக்கிறது. மனிதர்களை கிண்டல் செய்வது போல மோசமான பேய் மாதிரி சிரித்து இருக்கிறது. இந்த சிரிப்பு சத்தமே பயமுறுத்தும் அளவிற்கு இருக்கிறது.

  காரணம்

  இதற்கு சரியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் நாம் சொல்லும் விஷயங்கள் தவறாக சிரிக்க சொன்னதாக நினைத்துக் கொண்டு அலெக்ஸா சிரிப்பதாக அமேசான் நிறுவனம் பதில் சொல்லி இருக்கிறது. விரைவில் புதிய அப்டேட் மூலம் சரி செய்வோம் என்று கூறியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Amazon's Alexa suddenly laughing at everyone for no reason. Alexa laughing increasing day by day for every users. Amazon says that it will clear the bug in next update.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற