திக்..திக்.. மண்டை ஓடு குவியலால் ஒரு கோபுரம்.. மாயன் கால நரபலி இதுதானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மெக்ஸிகோ: நூற்றுக்கணக்கான மனித மண்டை ஓடுகளால் கட்டப்பட்ட கோபுரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மாயன் வம்ச காலக் கட்டத்தில் இருந்ததாக கருதப்படும் நரபலியை உறுதி செய்வதாக உள்ளது என தொல் பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பழங்கால மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்திருக்கும் அவர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்பது குறித்து உலகின் ஒவ்வொரு மூலையிலும் அனுதினமும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

எகிப்து பிரமிடுகள் உட்பட புராதன சின்னங்கள் உள்ள ஒவ்வொரு இடத்திலும் தொல்லியல் துறையிளர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன் பதிலாக கிடைத்ததுதான் மாயன் வம்ச தகவல்கள், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்தின் மம்மிக்கள் உள்ளிட்ட பல.

அச்சுறுத்தும் மண்டை ஓடு கோபுரம்

அச்சுறுத்தும் மண்டை ஓடு கோபுரம்

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக முற்றிலும் மனித தலைகளால் உருவாக்கப்பட்ட கோபுரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தும் கோபுரம் மெக்ஸிகோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

676 மண்டை ஓடுகளால்

676 மண்டை ஓடுகளால்

மெக்சிகோ தலைநகரில் பழங்கால அஸ்டெக் கோவில் அமைந்துள்ள பகுதியில் தொல்லியர் ஆய்வாளர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது அங்கு 676 மனித மண்டை ஓடுகளால் ஆன கோபுரம் ஒன்றை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாயன் கால நரபலி

மாயன் கால நரபலி

இது மாயன் வம்ச கால கட்டத்தில் நரபலி கலாச்சாரம் இருந்துள்ளதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது எனவும் தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அஸ்டெக் மற்றும் மெசோமெரிக்கன் மக்கள் சூரிய கடவுளுக்கு நரபலி அளித்து வந்துள்ளது வரலாற்றாசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் ஆக்கிரமிப்பில் இருந்து..

ஸ்பெயின் ஆக்கிரமிப்பில் இருந்து..

இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகளால் ஆன கோபுரமானது ஸ்பெயின் நாட்டவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து அப்போதைய குடிமக்களை காக்கும் பொருட்டு அமைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த மண்டை ஓடுகள் வரிசை அடுக்கப்பட்டும் சுவற்றில் புதைக்கப்பட்டும் கோபுரமாக கட்டப்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகள் மண்டை ஓடு..

பெண்கள், குழந்தைகள் மண்டை ஓடு..

ஆண்கள், இளைஞர்கள் மட்டுமின்றி பெண்கள் மற்றும் குழந்தைகள் பலரின் மண்டை ஓடுகளும் இந்த கோபுரத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் போர்படை வீரர்களாக இருந்திருக்கலாம் ஏதாவது போரின் போது கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஒன்று மட்டும் ஸ்பானியர்..

ஒன்று மட்டும் ஸ்பானியர்..

மேலும் கண்டெடுக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் ஒரு மண்டை ஓடு மட்டும் ஸ்பெயினைச் சேர்ந்த ஒருவரது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மண்டை ஓடு கோபுரம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Archaeologists in Mexico have found a creepy tower made from hundreds of human skulls, including women and children. Scientists found 676 skulls covered in lime at the cylindrical edifice near the Templo Mayor, in Aztec capital Tenochtitlan.
Please Wait while comments are loading...