For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பள்ளிகளுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்! இங்கிலாந்தில் பரபரப்பு !!

By Karthikeyan
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் பள்ளிகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் சம்பவம் அந் நாட்டினரிடையே அச்சத்தையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் லண்டன் மற்றும் மேற்கு மிட்லேண்ட் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 18 பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மர்ம நபர்கள் இன்று மிரட்டல் விடுத்தனர். அந்நாட்டு நேரப்படி காலை 8 மணியளவில் பள்ளிகளுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

Bomb threats force evacuation of 18 UK schools

இதனை தொடர்ந்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உடனடியாக போலீசாரால் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து போலீசார் பள்ளிகளில் சோதனையிட்டனர். இந்த மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த வாரத்தில் 3வது முறையாக இங்கிலாந்து நாட்டு பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டல் இதுவாகும். கடந்த செவ்வாய் கிழமை மேற்கு மிட்லேண்டில் உள்ள 4 பள்ளிகளுக்கு மிரட்டல் விடப்பட்டது.

அதன்பின் லண்டன் மற்றும் மேற்கு மிட்லேண்ட் நகரங்களில் உள்ள தலா 4 பள்ளிகளுக்கு மற்றும் கார்ன்வால் நகரத்தின் 4 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தில் லண்டன் மற்றும் மேற்கு மிட்லேண்ட் உள்ளிட்ட நகரங்களை இலக்காக கொண்டு குறைந்தது 18 பள்ளிகளுக்கு இன்று மிரட்டல் விடப்பட்டுள்ளது. இந்த மிரட்டல்கள் போலியானவை என போலீசார் கூறியுள்ளனர். இன்று மதியம் சில பள்ளி கூடங்கள் மாணவர்கள் திரும்பியதை அடுத்து செயல்பட தொடங்கின.

English summary
Schools in London and Birmingham are on high alert after more were forced to evacuated this morning over bomb threats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X