For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலியாவில் பயங்கர காட்டுத் தீ... சிட்னியை நாசமாக்கும் பேரழிவு!

ஆஸ்திரேலியாவில் புற்கள் மூலம் பரவும் புதர் தீ சிட்னி நகரத்தில் உருவாகி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவில் புற்கள் மூலம் பரவும் புதர் தீ சிட்னி நகரத்தில் உருவாகி இருக்கிறது. இது அந்த நகரத்தில் பெரும்பாலான இடங்களில் பரவி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் சிட்னியின் பெரும்பாலான பகுதிகளில் இந்த தீ ஏற்பட்டு இருக்கிறது. இது எப்படி உருவானது என்று தெரியவில்லை. கடந்த சனிக்கிழமை உருவான இந்த தீ வேகமாக வீசும் காற்று காரணமாக பரவி வருகிறது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகிறார்கள்.

Bushfire in Syndey forces people to evacuate

இந்த தீ இதுவரை 2,200 ஏக்கர் நிலப்பரப்பை நாசம் செய்துள்ளது. இன்னும் வேகமாக இது பரவி வருகிறது. புற்கள் இருக்கும் பகுதியை நோக்கி நகர்வதால், சிட்னியில் அதிக மக்கள் தொகை வசிக்கும் இடங்களில் இந்த தீ பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தீயை அணைக்கும் பணியில் 500க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். 15க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் இந்த தீயை அணிக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. ஆனாலும் காற்று அதிகமாக இருப்பதால் தீயை அணைக்க முடியவில்லை.

சிட்னியில் இருக்கும் மக்களை வெளியேறும்படி அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை இதனால் மரணமோ, வீடுகள் நாசமோ, காயமோ யாருக்கும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

English summary
Bushfire in Syndey forces people to evacuate.No death or injuries has recorded until today due to this fire.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X