For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹெங்கின் ”கின்னஸ்” சாதனை மீன் காட்சியகம் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு தூண்டில் போடும் சீனா!

Google Oneindia Tamil News

ஹெங்கின், சீனா: தனது நாட்டின் பொருளாதார மந்த நிலையால் சிக்கல்களைச் சந்தித்து வரும் சீனா, கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் வைத்து மறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

தற்போது அதன் பார்வை குட்டித் தீவான ஹெங்கின் மீது பதிந்துள்ளது.

சீன -ஹாங்காங் எல்லையில் உள்ளதுதான் ஹெங்கின் தீவு. இங்கு 63 மீட்டர் உயரம் கொண்ட நீல நிறமுடைய பெரிய சுறா மீன் சிலை இந்தத் தீவின் முக்கிய அடையாளம்.

China fishes for growth with world’s largest aquarium

பொருளாதார மீட்பு நடவடிக்கை:

இங்குள்ள உலகின் மிகப் பெரிய நீர் அருங்காட்சியகம் அதாவது மீன் காட்சியகம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய அம்சமாகும். இங்கிருந்துதான் தற்போது தனது நாட்டின் பொருளாதார மறு மீட்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகிறது சீன அரசு.

ஹெங்கின் தீவு:

ஹாங்காங்கின் எல்லையை ஒட்டியுள்ள ஷென்ஷென் நகரிலிருந்து பியர்ல் ஆற்றைக் கடந்து சென்றால் வருவதுதான் ஹெங்கின் தீவு. இந்தத் தீவுப் பகுதி 35 வருடங்களுக்கு முன்பு சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது.

மீன்பிடி கிராமம்:

ஒரு காலத்தில் இது வெறும் மீன்பிடி கிராமமாகவே இருந்தது. ஆனால் தற்போது வெளிநாட்டு முதலீடுகள் இந்தத் தீவை ஜொலிக்க வைத்துள்ளன. மிகப் பெரிய பொருளாதார கேந்திரமாகவும் இது மாறியுள்ளது .

1 கோடி மக்கள்:

இங்கு 1 கோடிப் பேர் தற்போது வசித்து வருகின்றனர். மிகப் பெரிய, உயரமான கட்டடங்கள் இந்தத் தீவின் முகத்தையே மாற்றிப் போட்டுள்ளன.

சீனாவின் திட்டம்:

ஆனால் சீனாவில் தற்போது பொருளாதாரம் மந்த கதியில் இருப்பதால் இந்தத் தீவை வைத்து பொருளாதார மறு மீட்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருகிறது சீன அரசு.

நடவடிக்கைகள் மும்முரம்:

ஹெங்கின் தீவிலிருந்து தனது பொருளாதார மறு மீட்பு நடவடிக்கைகளை அது தொடங்கவுள்ளது. ஹெங்கின் தீவு திட்டத்தை பரீட்சார்த்தமாக அது செய்யப் போகிறது.

பொழுது போக்கு அம்சங்கள்:

இந்தத் தீவை கல்வி, சுற்றுலா மற்றும் கிரியேட்டிவ் தொழில்துறை ஆகியவற்றின் வளர்ச்சி மையமாக மாற்ற சீனா திட்டமிட்டுள்ளது. இங்கு அதிக அளவில் பொழுது போக்குப் பூங்காக்கள், ஹோட்டல்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.

மத்திய தர வர்க்கத்தினர்:

மத்திய தர வர்க்கத்தினரைக் கவரும் வகையிலான அம்சங்களையும் இங்கு அதிக அளவில் ஏற்படுத்த சீன அரசு திட்டமிட்டுள்ளது.

மிகப்பெரிய மீன் காட்சியகம்:

கடந்த மார்ச் மாதம்தான் இந்த மீன் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. இது 5 பில்லியன் டாலர் மதிப்பில் நிறுவப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய நீர் அருங்காட்சியகம் இது என்று கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது.

கடலின் அழகு:

நீல நிற ஒளியில் கடலுக்கடியில் உள்ள மீன் வகைகளை மிகப் பெரிய ஸ்கிரீன் வழியாக நேரடியாகவே பார்த்து ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.

பிரமிப்பூட்டும் மீன்கள்:

மிகப் பெரிய மீன்களையும் கூட வெகு அருகில் பார்த்து நாம் பயந்து போகக் கூடிய வகையில் ஏற்பாடுகள் பிரமிப்பூட்டும் வகையில் இங்கு செய்யப்பட்டுள்ளன.

கூடும் எண்ணிக்கை:

இந்த மீன் காட்சியகத்திற்கு வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட தொடங்கியது.

ஹாங்காங் அருகில்:

ஹெங்கின் தீவுக்கு வெகு அருகில்தான் ஹாங்காங் உள்ளது. அதேபோல மக்காவும் அருகில் உள்ள இன்னொரு பகுதி.

மக்காவ் கூட பக்கம்தான்:

ஹெங்கின் தீவிலிருந்து சில நிமிடங்களில் இந்த இரு பகுதிகளுக்கும் போய் விடலாம். எனவே ஹாங்காங் மற்றும் மக்காவ் வரும் மக்களும் ஹெங்கின் தீவுக்குப் படையெடுத்து வருகின்றனர். மக்காவ் உலகின் மிகப் பெரிய சூதாட்ட களம் என்பது நினைவிருக்கலாம்.

10000 நிரந்தர வீடுகள்:

ஆனால் மக்காவ் போல ஹெங்கின் தீவில் சூதாட்டத்திற்கு அனுமதி இல்லை. அதேசமயம், இங்கு பொழுது போக்கு அம்சங்களுக்குப் பஞ்சம் இல்லை. இந்த தீவில் 10,000 நிரந்தர வீடுகள் உள்ளன. அதேசமயம், நிறைய ரிசார்ட்டுகளும் தங்கும் இட வசதியும் நிறையவே உள்ளது.

அமல்படுத்தும் சீனா:

எனவேதான் ஹெங்கின் தீவை வைத்து தனது பொருளாதார மறு மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது சீன அரசு. இங்கு பல திட்டங்களை ஏற்கனவே அது அறிவித்து அமல்படுத்தவும் ஆரம்பித்து விட்டது.

இணையத்துக்கும் நோ தடை:

இங்கு இன்டர்நெட் சென்சாருக்கும் தற்போது விலக்கு தரப்பட்டுள்ளது. எனவே சீனாவின் மெயின்லேன்ட்டில் தடை செய்யப்பட்டுள்ள பல இணையதளங்களை இங்கு தாராளமாக பார்க்கலாம். குறிப்பாக பேஸ்புக், யூடியூப், டிவிட்டருக்கு இங்கு தடை இல்லை.

English summary
A giant 63-meter blue whale shark statue towers over the world's largest aquarium, on a Chinese island being promoted as a testing ground for reforms aimed at encouraging domestic consumption as the driver of economic growth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X