Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொஞ்சம் கூட கேப் விடாத அமெரிக்கா! ரஷ்யாவிற்கு உதவ போய்.. இப்போ சீனாவை நெருங்கும் ஆபத்து.. திருப்பம்!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவை தொடர்ந்து சீனா மீது குறிப்பிட்ட சில பொருளாதார தடைகளை போட அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. அமெரிக்கா சீனா இடையே ஏற்கனவே பொருளாதார போர் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் அந்த நாடு பல்வேறு பொருளாதார தடைகளை, உலக நாடுகளின் எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக சர்வதேச பண பரிவர்த்தனை தளமான SWIFT தளத்தில் இருந்து ரஷ்யாவை நீக்க உலக நாடுகள் முடிவு செய்துள்ளன.

ஒரு நாட்டின் வங்கியில் இருந்து இன்னொரு நாட்டு வங்கிக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்படும் போது அதை உறுதி செய்யும் மெசேஜிங் தளமாக இது செயல்படும். ஒரு நாட்டின் வங்கி இன்னொரு நாட்டு வங்கிக்கு பணம் அனுப்புவதும் இந்த SWIFT தளம் மூலமே உறுதி செய்யப்படும்.

SWIFT என்றால் என்ன

SWIFT என்றால் என்ன

இதில் இருந்துதான் தற்போது ரஷ்யா நீக்கப்பட்டு உள்ளது. SWIFT தளம் இன்றி சர்வதேச அளவில் வங்கிகள் பரிவர்த்தனை மேற்கொள்வது மிக கடினம். உலக அளவில் நம்பப்படும் சர்வதேச, பாதுகாப்பான பரிவர்த்தனை SWIFTதான். மிக மிக பாதுகாப்பானது இது. 1970களில் இருந்து SWIFT பயன்பாட்டில் இருக்கிறது. பெல்ஜியத்தை சேர்ந்த கோ ஆப்பரேட்டிவ் வங்கிகள் உருவாக்கிய இந்த SWIFT தளம் தற்போது சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது.

சீனா அமைப்பு

சீனா அமைப்பு

ஆனால் இந்த swift ஐ சீனா அதிகம் பயன்படுத்துவது இல்லை. மாறாக CHIPS என்ற தொழிநுட்பத்தை வேறு சில நாடுகள் பயன்படுத்துகிறது. இதை Clearing House Interbank Payments System என்று கூறுவார்கள். இதில் மொத்தம் 43 வங்கிகள், நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. தினமும் 1.8 டிரில்லியன் டாலர் பரிவர்த்தனையை இந்த அமைப்பு கிளியர் செய்து வருகிறது. இதுவும் அமெரிக்க விதிக்கு கட்டுப்பட்ட ஒன்று என்பதால் ரஷ்யா இதை பயன்படுத்த முடியாது.

சீனாவை நம்பும் ரஷ்யா

சீனாவை நம்பும் ரஷ்யா

இதனால் ரஷ்யா தற்போது சீனாவை நம்பி நிற்க வேண்டும் நிலையில் உள்ளது. சீனா swift, chips இரண்டுக்கும் பதிலாக CIPS என்ற பரிவர்த்தனை அமைப்பை பயன்படுத்தி வருகிறது. Cross-Border Interbank Payment System என்று இதை அழைப்பார்கள். 2015ல் இருந்து ரஷ்யா இதை பயன்படுத்தி வருகிறது. உலக நாடுகள் சீனாவிற்கு அனுப்பும் பணத்தை இந்த அமைப்புதான் வங்கி போல செயல்பட்டு யான் பணமாக மாற்றி கிளியர் செய்து வருகிறது.

ரஷ்யா உதவி

ரஷ்யா உதவி

swift போலவே இதுவும் பண பரி வர்த்தனையை உறுதி செய்யும் மெசேஜிங் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் சீனா அவ்வப்போது swift அமைப்பையும் பயன்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா நம்மை தடை செய்துவிடுமோ என்ற அச்சத்தில் சீனா இந்த cips மாற்று ஏற்பாட்டை செய்து வைத்து இருந்தது. தற்போது swiftல் இருந்து ரஷ்யா தடை செய்யப்பட்ட நிலையில் அது சீனாவின் cips ஐ நம்பி இருக்கிறது.

சீனாவிற்கு சிக்கல்

சீனாவிற்கு சிக்கல்

தனது பணபரிவர்த்தனைக்கு சீனாவின் Cross-Border Interbank Payment System மூலம் பணிகளை மேற்கொள்ள ரஷ்யா முடிவு செய்துள்ளது. இல்லையென்றால் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி, சர்வதேச வணிகம் எல்லாம் பாதிக்கப்படும். ரஷ்யா தங்கள் நாட்டிற்கு வெளியே உள்ள ஒரு வங்கிக்கு ஒரு ரூபாய் கொண்டு செல்ல வேண்டு என்றாலும் இனி cips உதவி இன்றி நடக்காது. சீனாவும் ரஷ்யாவிற்கு இதில் உதவி செய்ய தயாராகவே இருக்கிறது.

சீனா தடை

சீனா தடை

ஆனால் சீனா ஒருவேளை ரஷ்யாவிற்கு தங்கள் பணப்பரிவர்த்தனை மெசேஜ் சிஸ்டமான cips ஐ வழங்கினால் சீனா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என்று தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே ரஷ்யாவிற்கு சீனா ஆதரவு அளிப்பதால் அமெரிக்கா சீனா மீது கோபமாக உள்ளது. இந்த நிலையில்தான் cips அமைப்பை வைத்து ரஷ்யாவிற்கு சீனா உதவினால் சீனா மீது பொருளாதார தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Recommended Video

    Kyiv நகரில் முன்னேற முடியாமல் தவிக்கும் Russian Army.. என்ன காரணம்?
     அமெரிக்கா சீனா மோதல்

    அமெரிக்கா சீனா மோதல்

    அமெரிக்காவை சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டர் மார்க் ரூபியோ இதற்காக மசோதா ஒன்றை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வர இருக்கிறார். ரஷ்யாவிற்கு சீனா cips கொடுத்து உதவினால் உடனே சீனா மீது பொருளாதார தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை அவர் அறிமுகப்படுத்த உள்ளார். இந்த சட்டம் நிறைவேறும் பட்சத்தில் அது சீனாவிற்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கும். ரஷ்யா போல பொருளாதார ரீதியாக சீனாவும் தனித்து விடப்படும் வாய்ப்புகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+