இரட்டிப்பு ஆபத்து.. சீனாவின் ஜெஜியாங் நகரில் கொரோனா ஒருநாள் பாதிப்பு மட்டும் இவ்வளவா?.. யப்பா
பெய்ஜிங்: ஓமிக்ரான் பிஎப் 7 உருமாறிய கொரோனா வைரஸால் சீனா சிக்கலை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தான் சீனாவின் முக்கிய தொழில்துறை நகரமாக அறியப்படும் ஜெஜியாங் ஆபத்தில் சிக்கி உள்ளது. தற்போது தினசரி பாதிப்பு என்பது 10 லட்சமாக இருக்கும் நிலையில் இன்னும் சில நாட்களில் பாதிப்பு இரட்டிப்பாக வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளதால் அந்த நகர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சீனாவில் 2019 இறுதியில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக வளர்ந்த, வளரும் நாடுகள் என அனைத்து மக்களையும் இந்த கொரோனா வைரஸ் முடக்கியது. உலகம் முழுவதும் பலகோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் மக்கள் கொத்து கொத்தாக இறந்தனர்.
இதையடுத்து தடுப்பூசிகள் கண்டுப்பிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இயல்பாக மக்களுக்கு இருந்த எதிர்ப்பு சக்தி, கொரோனா தடுப்பூசி கொடுத்த எதிர்ப்பு திறன் உள்ளிட்டவற்றால் கொரோனா பாதிப்பு என்பது படிப்படியாக குறைந்தது.

சீனாவில் பரவும் கொரோனா
இதனால் கடந்த 8 மாதங்களாக இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனா கட்டுக்குள் வந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையே தான் சீனா, அமெரிக்கா, தென்கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 வைரஸ் வேகமாக பரவி வருவதால் அந்நாடு திணறி வருகிறது. மேலும் அந்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கடுமையான கட்டுப்பாடுகள் பொதுமக்கள் போராட்டத்தால் தளர்த்தப்பட்டது. இதுவும் அந்நாடு பின்னடைவை சந்திப்பதற்கு முக்கிய காரணமாகும்.
தினசரி பாதிப்பு எவ்வளவு?

5 நாட்கள் பலி இல்லையாம்
சீனாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு இருந்தாலும் கூட அந்நாடு அதுதொடர்பான விபரங்களை வெளியிட மறுத்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்திடமும் அதுசார்ந்த டேட்டாக்களை கொடுக்காமல் சீனா மறைக்கிறது. மாறாக ஒவ்வொரு நாளும் வெறும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்படுவதாக சீனா தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு உள்ள நிலைமை என்பது வேறாக உள்ளது. ஒரே நாளில் 3.7 கோடி பேர் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்தாலும் கடந்த 5 நாட்கள் கொரோனா பலி பதிவாகவில்லை என சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ஆபத்தில் சிக்கிய ஜெஜியாங்
இந்நிலையில் தான் தற்போது இன்னொரு ஷாக்கான விஷயம் வெளியாகி உள்ளது. அதாவது சீனாவின் ஷாங்காய் அருகே ஜெஜியாங் மாகாணம் உள்ளது. தொழில்துறை நகரமான இங்கு தினமும் ஒரு மில்லியன் (10 லட்சம்) பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் ஷாக்கான தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வரும் நாட்களில் இந்த பாதிப்பு என்பது இரட்டிப்பாகும் என மாகாண அரசு கூறியுள்ளதால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பலரும் அறிகுறியின்றி கொரோனாவால் பாதிக்கப்படும் சூழலால் சீனா மிகவும் சிக்கலான நிலையை சந்தித்துள்ளது.

20 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு
மேலும் இந்த ஜெஜியாங் நகரில் கொரோனா பாதிப்பு என்பது புத்தாண்டு தினத்தில் உச்சம் தொடும் எனவும், ஒரு நாளுக்கான கொரோனா பாதிப்பு என்பது ஜெஜியாங்கில் 20 லட்சமாக இருக்கும் எனவும் அந்த மாகாண அரசு தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசு தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

14 மடங்கு வரை அதிகம்
ஜெஜியாங் மாகாணத்தை பொறுத்தமட்டில் 65.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். தற்போது காய்ச்சல் தொடர்பான சிகிச்சைக்கு தினமும் 4 லட்சத்து 8 ஆயிரத்து 400 பேர் சென்று வருகின்றனர். இது வழக்கத்தை விட 14 மடங்கு அதிகமாகும். மேலும் ஜெஜியாங் மாகாண தலைநகரான ஹங்சோவில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு வரும் போன்கால்களின் எண்ணிக்கை என்பது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

பிணக்குவியல்கள்
இதுதவிர பல்வேறு முக்கிய நகரங்களில் தினமும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருவதால் மருத்துவமனைகளில் இடமில்லா சூழல் உள்ளது. மேலும் மக்கள் அடிக்கடி இறப்பதால் அவர்களை தகனம் செய்ய வழியின்றி குடும்பத்தினர் மணிக்கணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் தகனம் செய்யும் இடங்களில் பிணங்கள் குவிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications