சாக்லேட் சாப்பிடப்போகும் கடைசி தலைமுறை நாம்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அமெரிக்கா: தட்பவெட்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சாக்லெட் தயாரிப்பு இன்னும் முப்பது வருடங்களில் அழிந்து விடும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைவரும் விரும்பி உண்ணும் இனிப்புகளில் ஒன்று சாக்லேட். சாக்லேட்டில் இனிப்பு சுவை என்பது கொக்கோ மரங்களிலிருந்து கிடைக்கப்படும் கொக்கோ பீன்ஸிலிருந்து கிடைக்கிறது. கசப்பு சுவை கொண்ட இதனுடன் இனிப்பு சேர்க்கப்பட்டு சாக்லேட் செய்யப்படுகிறது.

 Chocolates are going to be vanished says researches

கொக்கோ மரங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் அதிக அளவு காணப்படுகின்றன. உலகில் 50 சதவீதம் சாக்லேட் இங்கிருந்து தான் பெறப்படுகிறது. ஐவரி கோஸ்ட் மற்றும் கானா ஆகிய இரு ஆப்பிரிக்க நாடுகளில் கொக்கோ மரங்கள் அதிகளவில் உள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'உலகின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே செல்கிறது. அடுத்த 30 ஆண்டுகளில் 2.1 செல்சியஸ் வெப்பநிலை கூடும். இதனால் சாக்லேட் உற்பத்தி அதிக அளவு பாதிக்கப்படும். கொக்கோ மரங்கள் வளர்வதற்கு அதிகப்படியான மழை தேவை' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மரங்களை போல கொக்கோ மரங்களை புதிய தொழில்நுட்பங்களின் மூலம் உருவாக்க முடியாது. 90 சதவீத கொக்கோ மரங்கள் சிறிய அளவிலான பண்ணைகள் மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. மழையின் அளவு குறைவதால் கொக்கோ மரங்களின் வளர்ச்சி குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் ஆண்டிற்கு 1 லட்சம் டன் சாக்லேட் பற்றாக்குறை ஏற்படுகிற வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர் டங் ஹாகிங்ஸ் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chocolates are going to be vanished as the global warming is shooting up day by day, says researchers. The raw material for chocolate is cocoa beans and the result of global warming cocoa trees are been destroyed, the researchers added.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற