For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரப்பான்பூச்சியை பாத்ரூம்ல பார்த்திருப்ப, டாய்லட்ல பார்த்திருப்ப... ரோபோட்டா பார்த்திருக்கியா?

Google Oneindia Tamil News

பெர்க்லி, கலிபோர்னியா: கரப்பான் பூச்சியைப் பாத்ரூமில் பார்த்திருக்கிறோம்.. டாய்லெட்டில் பார்த்திருக்கிறோம்.. இனிமேல் அதை ரோபோட் வடிவிலும் பார்க்கப் போகிறோம். ஆம், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கரப்பான் பூச்சி மாதிரியே ஒரு ரோபோட்டை வடிவமைத்துள்ளது.

அமெரிக்காவின் பெர்க்லியைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று இந்த நூதன ரோபோட்டை வடிவமைத்துள்ளது.

இது மிகச் சிறிய குறுகலான இடத்திலும் கூட அழகாக புகுந்து புறப்பட்டுப் போய் விடும் என்பது தான் இதன் விசேஷமே.

சுற்றுச்சூழல் ஆய்வுகளுக்கு...

சுற்றுச்சூழல் ஆய்வுகளுக்கு...

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த ஆய்வுக் குழு, சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளுக்கு இந்த கரப்பான் ரோபோட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறியுள்ளது.

டிசைன் அப்படி...

டிசைன் அப்படி...

இதன் வடிவம் காரணமாக மிகச் சிறிய, குறுகலான இடத்திலும கூட இது இலகுவாக போய் விடும். குறிப்பாக புல், புதர் போன்ற பகுதிகளில் இந்த ரோபோவால் எளிதாக ஊடுறுவி செல்ல முடியும்.

மீட்புப் பணிகளில்...

மீட்புப் பணிகளில்...

மேலும் மீட்பு மற்றும் தேடுதல் பணிக்குத் தேவையான தகவலைப் பெறவும் இது மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக மலைபகுதிகள், வனங்களில் தேடுதல் பணிகளில் இது பேருதவியாக இருக்கும்.

செயல் விளக்கம்...

செயல் விளக்கம்...

சென் லி தலைமைியலான ஆய்வுக் குழுவினர் இதுகுறித்த செயல் விளக்கத்தையும் காட்டியுள்ளனர். இதன் முதல்கட்ட ஆய்வு முடிவுகள் பயோ இன்ஸ்பிரேஷன் மற்றும் பய மெடிக்ஸ் இதழில் வெளியாகியுள்ளது.

தடைகளில்லை...

தடைகளில்லை...

தற்போது உள்ள நில ரோபோட்டுகள் அனைத்தும் தடைகள் இல்லாத பகுதிகளில்தான் எளிதாக செயல்படும் வகையில் உள்ளன. காரணம் அதன் மோட்டார்கள், சென்சார்கள் நீட்டிக் கொண்டு இருப்பதால். ஆனால் இந்த கரப்பான் ரோபோட் அப்படி இல்லை. எந்தவிதமான தடையும் இல்லாமல் இது செல்லக் கூடியதாகும்.

பிளாபரஸ் டிஸ்கோடாலிஸ் வகை...

பிளாபரஸ் டிஸ்கோடாலிஸ் வகை...

இந்த ரோபோட்டை வடிவமைப்பதற்காக பிளாபரஸ் டிஸ்கோடாலிஸ் வகை கரப்பான்பூச்சியை ஆய்வுக்கு எடுத்து, அதன் அடிப்படையில் இந்த புதிய ரோபோட்டை உருவாக்கியுள்ளனர்.

6 கால்கள்...

6 கால்கள்...

இந்த ரோபோட்டுக்கு 6 கால்கள் உள்ளன. ரெக்டாங்குலார் வடிவில் இது உள்ளது. கரப்பான் பூச்சி அளவில்தான் இதன் உருவம் இருக்கும். புற்களுக்கு இடையிலும், செடி கொடிகளுக்கு மத்தியிலும் இது எளிதாக செல்லும்.

அடுத்து...?

அடுத்து...?

அடுத்து பல்வேறு விதமான விலங்குகளின் வடிவிலும் ரோபோட்டுகளைத் தயாரிக்க இந்தக் குழுவினர் யோசித்து வருகின்றனாரம்.

English summary
Berkeley, California - US-based researchers have created a robot that can use its body shape to move through a densely cluttered environment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X