சக்ஸஸ்.. முழு பவரையும் காட்டிய ஈரான்! இஸ்ரேலுக்குள் சரமாரியாக பாய்ந்த ஏவுகணைகள்! திணறிய நெதன்யாகு!
தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு, ரொம்பவும் ஆக்ரோஷமாக ஈரான் பதிலடி கொடுக்க தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, இஸ்ரேல் மீது நேற்று நடத்தப்பட்ட 66வது அலைவரிசை தாக்குதலில், ஈரான் தனது பலத்தை நிரூபித்திருக்கிறது.
இதற்கு முன்னர் வரை அனுப்பப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் பெரிய அளவில் தடுத்து வந்திருந்தது. ஆனால், 66வது அலைவரிசை தாக்குதலை தடுக்க முடியாமல் அந்நாடு திணறியிருக்கிறது.

எங்கெல்லாம் அட்டாக்?
இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம், ஹைபா மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த பகுதிகள் எல்லாம், சக்தி வாய்ந்த ஏவுகணை தடுப்பு அம்சத்தின் பாதுகாப்பில் இருப்பவை. ஆனாலும் அதையெல்லம் மீறி, ஈரான் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
உச்சக்கட்டத்தில் ஈரான்
சாதாரண ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்துவிடும். ஆனால், ஒரு ஏவுகணைக்குள் 20 முதல் 80 வரை சிறிய குண்டுகளைக் கொண்ட 'கிளஸ்டர்' வகை ஏவுகணைகளைத் தடுப்பது மிகவும் கடினம். ஏவுகணை சுடப்பட்டாலும், அதனுள் இருக்கும் சிறிய குண்டுகள் பரவலான இடங்களில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஈரான் தற்போது இந்த வகை குண்டுகளை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
இது தவிர, காதிர் (Qadr), கோரம்ஷார் (Khorramshahr), கைபர் ஷெக்கான் (Kheibar Shekan) போன்ற நடுத்தர மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் தற்கொலை படை ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எரிவாயு சப்ளை
இந்த போர் இப்போதைக்கு நிற்கும் நிற்காது. தாக்குதல் மேலும் நீடிக்கும் என்று ஈரான் அறிவித்திருக்கிறது. மட்டுமல்லாது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடம் கொடுக்கும் நாடுகளும் தங்கள் எதிரிகள்தான் என்று அறிவித்திருக்கிறது. இதுவரை வளைகுடா நாடுகளின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் வயல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளையை பாதித்திருக்கிறது.
அமெரிக்காவின் ஆட்டம்
குறிப்பாக கத்தாரின் மிகப்பெரிய எரிவாயு வயல் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அடுத்த 5 ஆண்டுகளுக்கு எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதெல்லாம் அமெரிக்கா மீது மறைமுகமாக அழுத்தத்தை அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவிலும் எரிபொருள் விலை அதிகரித்திருக்கிறது. எனவே போரை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி டிரம்ப் பேச தொடங்கியிருக்கிறார். மறுபுறம், ஈரான் மீது தரை வழியாக போர் தொடுக்க கடற்படை வீரர்களையும் அனுப்பியிருக்கிறார்.
-
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
முடங்கும் அமேசான் சேவைகள்? ஈரான் சரமாரி ‘அட்டாக்’.. பற்றி எரியும் பஹ்ரைனால் டிரம்புக்கு பிரஷர் -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை! -
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே














Click it and Unblock the Notifications