For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

360 டிகிரில துபாய் தெரியுது மாப்ள... எல்லாம் இந்த வெப்சைட்லதான் மச்சி!

Google Oneindia Tamil News

துபாய்: 360 டிகிரி கோண புகைப்பட கலை உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று வரும் நிலையில், இந்த தொழில் நுட்பம் தற்பொழுது துபாய் நகரை காணும் வகையில் அறிமுகம் செய்யப்படுள்ளது.

துபாய் 360 டிகிரி ஏரியல் வியூவை http://dubai.globalvision360.com என்ற லிங்கில் சென்று காணலாம்.

உலக‌த்தில் எந்த மூலையில் இருந்தும் உங்களது கணினியின் முன் அமர்ந்து, அல்லது உங்கள் கைபேசியில் இணையதள வசதியுடன் துபாயில் உள்ள முக்கியமான இடங்களை 360 டிகிரி கோணத்தில் நம்மால் இனி பார்க்க முடியும்.

முக்கிய இடங்கள்:

முக்கிய இடங்கள்:

இந்த தொழில்நுட்பத்தைக்கொண்டு 130 அடி உயரத்தில் இருந்து நம்மால் இனி துபாய் நகரில் உள்ள முக்கியமான இடங்களை சுற்றிப்பார்க்கும் வகையில் இந்த வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

குளோபல் விஷன்:

குளோபல் விஷன்:

துபாயில் புதிதாக துவங்க உள்ள‌ குளோப‌ல் விஷன் என்ற நிறுவனம் இந்த வசதியை தற்பொழுது துபாயில் அறிமுகப்படுத்தியுள்ளது.

நேரில் காணும் உணர்வு:

நேரில் காணும் உணர்வு:

இதன் மூலம் உலகப்புகழ் பெற்ற புர்ஜ் கலீஃபா முதல் ஜுமைரா பாம் தீவுகள் வரை அனேக இடங்களை நேரில் காண்பது போன்ற உணர்வுடன் காண இயலும்.

கழுகின் பார்வையில் துபாய்:

கழுகின் பார்வையில் துபாய்:

இந்த தொழில்நுட்பத்தை பயன் படுத்தி நாம் உயரத்தில் பறக்கும் ஒரு பறவையின் கண்களைக்கொண்டு காண்பதைப்போல கணிணி மூலம் கீழுள்ளதைக்காணலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

விக்கிபீடியாவும் உண்டு:

விக்கிபீடியாவும் உண்டு:

பனிரெண்டிற்கும் அதிகமான இடங்கள் பானோரமா 360 டிகிரி கோணத்தில் தற்பொழுது காட்சிக்காக இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் காண்பவர்களின் வசதிக்காக விக்கிபீடியா வசதியும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் குளோபல் விஷன் நிறுவன‌ம் தெரிவித்துள்ளது.

அதிநவீன தொழில்நுட்பம்:

அதிநவீன தொழில்நுட்பம்:

துபாயில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள தங்களது சேவையின் ஒரு முன்னோட்டமாகவே இந்த முயற்சி எனவும், இதற்காக அதிநவீன கேமராக்கள் மற்றும் கருவிகள் பயன்படுத்தப்பட்டு இந்த புகைப்படங்கள் வடிவமைக்கப்படுள்ளது எனவும் சுவிட்ச‌ர்லாந்தை தலைமையாக கொண்டுள்ள குளோப‌ல் விஷன் நிறுவன‌ம் தெரிவித்துள்ளது.

English summary
Anyone with an internet connection can take a virtual tour of Dubai as Dubai360.com went live today.The website boasts of allowing viewers to explore every angle of the city from the comfort of their homes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X