சிரியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய துருக்கி நிலநடுக்கம்! 237 பேர் சடலமாக மீட்பு.. கதறும் மக்கள்!
துருக்கியில் ரிக்டர் அளவில் 7.8 என உருவான நிலநடுக்கம், சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் எகிப்து வரையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டமாஸ்கஸ்: துருக்கியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் தாக்கம் அருகில் இருந்த சிரியாவிலும் உணரப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் காரணமாக சிரியாவில் சுமார் 237 பேர் உயிரிழந்துள்ளனர். 639 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
துருக்கியில் கடந்த சில நாட்களாக லேசான அளவில் நிலநடுக்கம் பதிவாகி வந்திருந்தது. கடந்த வாரம் துருக்கி எல்லையில் சுமார் 9.5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் 120க்கும் அதிகமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். ஆனால் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. இந்நிலையில், இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி சுமார் 3.30 மணியளவில் நூர்தாகி அருகே 9 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7.8 அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக முதலில் 42 பேர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் மீட்பு பணிகள் தீவிரமடைந்த நிலையில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. காலை 10 மணி நிலவரப்படி சுமார் 100 பேர் வரை உயிரிழந்துள்ளதாக மீட்பு படையினர் கூறியுள்ளனர்.

சிரியா
இது இப்படி இருக்கையில் துருக்கி எல்லையில் அமைந்துள்ள சிரியாவிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. இதில் சுமார் 232 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சிரியாவின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால் சிரியா கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இங்கு பணியாற்றும் மருத்துவர் ஒருவர் கூறுகையில், "இறப்பு எண்ணிக்கை 100க்கும் அதிகமாக இருக்கிறது. நாங்கள் மிகப்பெரிய அழுத்தத்தில் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

பேரழிவு
சிரியாவின் அலெப்போ மற்றும் மத்திய நகரமான ஹமாவில் அதிக அளவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. எனவே இந்த பகுதிக்கு கூடுதலாக மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டமாஸ்கஸ் பகுதியிலும் இது லேசான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் இந்த அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில்லை என்றும், இது ஒரு பேரழிவு எனவும் சிரியாவின் தேசிய நிலநடுக்க மையத்தின் தலைவர் ரேட் அகமது அந்நாட்டு செய்தி ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

வானிலை
துருக்கியிலும், சிரியாவிலும் மோசமான வானிலை நிலவுவதன் காரணமாக மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் மற்றும் அதன் தலைநகரான அங்கராவில் கடுமையான பனி பொழிவு நீடித்து வருகிறது. இதன் காரணமாக இங்கிருந்து கிழக்கு துருக்கிக்கு இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே தலைநகரிலிருந்து மீட்பு பணிகளுக்காக செல்லும் படைகள் தாமதமாகவே சென்றிருக்கின்றன. அதேபோல சிரியாவிலும் பனி பொழிவு இருப்பதால் உயிருடன் மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாமல் கொட்டும் பனியில் தவித்து வருகின்றனர்.

உதவி
இந்த நிலநடுக்கம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் சிக்கியுள்ளவர்களை மீட்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறது. இது குறித்து வெள்ளை மாளிவை விடுத்துள்ள அறிக்கையில், "நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் கவலையளிக்கிறது. எனவே மீட்பு பணிகளுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது" என்று கூறியிருக்கிறது. அதேபோல காலை 11 மணி நிலவரப்படி சிரியாவின் அலெப்போ, ஹமா மற்றும் லட்டாகியா பகுதிகளில் மட்டும் சுமார் 111 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 560 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிரிய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில், மதியம் 2 மணி நிலவரப்படி சுமார் 639 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications